உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோர்ட் உத்தரவுக்கு எதிராக அரசு மேல்முறையீடு: ஸ்டாலின்

கோர்ட் உத்தரவுக்கு எதிராக அரசு மேல்முறையீடு: ஸ்டாலின்

சென்னை:''கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணை குழுவில், தமிழக அதிகாரிகள் இடம்பெற கூடாது என்ற உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு அணுகும்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். சட்டசபையில் நடந்த விவாதம்: காங்கிரஸ் - செல்வப்பெருந்தகை: கரூர் துயரம் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இந்த விசாரணையை மேற்பார்வையிட, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் குழு அமைத்துள்ளது. இக்குழுவில், தமிழகத்தை பூர்விகமாக கொண்ட ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடம்பெறக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. இது சில பேதங்களை ஏற்படுத்தி விடுமோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது. எனவே, இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட வேண்டும். முதல்வர் ஸ்டாலின்: உச்ச நீதிமன்ற உத்தரவு, தமிழக மக்களுக்கு வேதனை அளிக்கும் ஒன்றாக உள்ளது. இதுகுறித்து, உரிய சட்ட ஆலோசனை பெற்று, உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு அணுகும். இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ