உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக அரசிடம் கவர்னர் ரவி அறிக்கை கேட்பு

தமிழக அரசிடம் கவர்னர் ரவி அறிக்கை கேட்பு

சென்னை: கரூரில், த.வெ.க., தலைவர் விஜயின் பிரசாரத்தில், 40 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தமிழக அரசிடம் கவர்னர் ரவி விளக்கம் கேட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், வாரந்தோறும் சனிக்கிழமை, இரண்டு சட்டசபை தொகுதிகளில் மக்களை சந்தித்து வருகிறார். நேற்று முன்தினம் நாமக்கல், கரூர் மாவட்டத்தில் விஜய் பிரசாரம் செய்தார். கரூரில் விஜய் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் இறந்தனர்; மருத்துவமனைகளில், 60க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, முதல்வர் ஸ்டாலினிடம் தொலைபேசியில் கவர்னர் ரவி பேசி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, தமிழக அரசிடம் கவர்னர் ரவி அறிக்கை கேட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை