வாசகர்கள் கருத்துகள் ( 2 )
சின்ன மாங்கா சங்கி
மரியாதை அறியாத திமுகவினரிடம் மரியாதை எதிர்பார்ப்பது நமது தவறு.
சென்னை: கவர்னர் ரவிக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.இது குறித்து அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் மரபுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் கவர்னர் ரவி புரிந்து கொள்ள வேண்டும். கவர்னருக்கு உரிய மரியாதை அரசு அளிக்க வேண்டும். தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள், உழவர்களின் எண்ணிக்கையிலடங்காத கோரிக்கைகள், பட்டியலின மக்களின் தேவைகள் என விவாதிக்கப்படுவதற்கும், செயல்படுத்தப்படுவதற்கும் ஏராளமான விவகாரங்கள் உள்ளன. அவற்றை விடுத்து, கவனத்தை திசைதிருப்பும் வகையிலான எந்த செயலையும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவை தவிர்த்திருக்கப்பட வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.
சின்ன மாங்கா சங்கி
மரியாதை அறியாத திமுகவினரிடம் மரியாதை எதிர்பார்ப்பது நமது தவறு.