வாசகர்கள் கருத்துகள் ( 8 )
கீழ்கண்ட குறளை கவர்னர் தம் உரையுடன் சேர்த்ததினால் இந்த ஐந்துமே இந்த திருட்டு திராவிடம் மடியல் அரசு ஆட்சியில் இல்லையென்று உடல் எரிந்து மனம் எரிந்து கவர்னரிடம் இப்படி நடந்து கொண்டது என்று தெள்ளத்தெளிவாகத்தெரிகின்றது. பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: நாடு / The Land குறள் 738: பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து. சிவயோகி சிவக்குமார் விளக்கம்: நோய் இல்லாது இருத்தல், நிறைந்த செல்வம், நல்விளைச்சலுடன் வளரும் இன்பம், பாதுகாப்புத் தன்மை இவை ஐந்தும் நாட்டின் அணிகலன்கள். மு.வரதராசன் விளக்கம்: நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.
உரையை வாசித்துவிட்டு பின் குறைகளை கேட்டு அறிந்துகொள்ளலாம் என்பது எமது கருத்து
தனது பதவியின் பெருமையையும் மாண்பையும் அறியாதவர்களே அடுத்தவர்களை எப்போதும் குறை சொல்லி கொண்டிருப்பார்கள்.
உண்மை
தவிர்க்க முடியாத மாற்றம், மரபுகள் தகர்க்கப்படுத்தல் என்று ஏதும் இல்லை, தான் தோன்றித்தனம், தான் ஒரு பட்டத்து அரசர் போலவும் மற்றவர்கள் அனைவரும் சாதாரண குடிமக்கள், மற்றும் ஏவலாட்கள் போலவும் நினைக்கும் நினைப்பு. ஒன்று நினைவு வைத்துக்கொள்ள வேண்டியது யாதெனில். சபாநாயகர் தான், சட்ட சபை தலைவர், அவர் எடுக்கும் முடிவுகள் கவர்னர் உள்பட அனைவரும் கட்டுப்பட வேண்டும். இல்லையெனில் சட்ட சபைக்கே வரக்கூடாது.
Union Government அமைச்சரவை தயாரித்துக் கொடுத்த உரையைத்தான் குடியரசுத் தலைவர் படிக்கவேண்டும்.. அவருக்கு அந்த உரையில் முரண்பட்டக் கருத்து இருந்தாலும் கூட. ஆளுநரைப் போல நியமனம் செய்யாமல், மக்களால் மக்கள் பிரதிநிதிகளால் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். என்றாலும் நாடாளுமன்றத்தில் அமைச்சரவை தயார் செய்த உரையை மட்டுமே படிக்க வேண்டும். ஆனால் தமிழ் நாடு ஆளுநர் தனது விருப்படி இல்லை என்று சபையை புறக்கணித்துச் செல்வது எப்படி..
நான் பிஜேபி அரசை மிகவும் நேசிப்பவன். ஆனால் கண்மூடித்தனமாக ஆதரிப்பதில்லை. தவறுகளை தவறு என்று சுட்டிக் காட்ட வேண்டும். அதுதான் ஒரு கட்சியின் வளர்ச்சிக்கு உதவும். கவர்னரின் சில நடவடிக்கைகள் தமிழ் நாட்டின் பிஜேபியின் வளர்ச்சியில் ஒரு சறுக்கலை உருவாக்கும். வேறு மாநிலத்தவருக்கும் தமிழ் நாட்டவருக்கும் வேறுபாடு உண்டு என்பதை தமிழ் நாட்டு பிஜேபி அறிந்து அதன்படி செயல்பட வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று நடந்து கொண்டால் கவிழ்வது நிச்சயம். பிஜேபியின் தேசிய இந்துத்துவா கொள்கைகைகள் சரியாகத்தான் இருக்கின்றன.ஆனால் தெற்கில் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றது. திராவிடக் கட்சிகள் அற்ற தமிழ்நாடு வேண்டுமானால் மாற்றங்கள் தேவை. இது என் தனிப்பட்ட கருத்து.
கவர்னரை எதிர்த்து, அவமதித்து வம்படி செய்தே ஆட்சிக்காலத்தை ஓட்டக்கூடாது ........ மக்களுக்கும் ஏதாவது உருப்படியாகச் செய்யவேண்டும் .......
மேலும் செய்திகள்
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
3 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
5 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
5 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
6 hour(s) ago | 6