உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விடியல் பயணத்தை கேலிக்கூத்தாக்கிய அரசு பஸ்: கட்டணம் இல்லை; அபராதம் மட்டும் உண்டா?

விடியல் பயணத்தை கேலிக்கூத்தாக்கிய அரசு பஸ்: கட்டணம் இல்லை; அபராதம் மட்டும் உண்டா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திருப்பூரில் இருந்து அரசு இலவச பஸ்சில் புளியம்பட்டி சென்ற பெண் பயணி, டிக்கெட் எடுக்கவில்லை என்று கூறி, 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. டிக்கெட் பரிசோதகர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழக அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில், பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. அதாவது, கண்டக்டர்களிடம் டிக்கெட் மட்டும் வாங்கிக் கொள்ள வேண்டும்; கட்டணம் கிடையாது என்ற நடைமுறை உள்ளது. இந்த நிலையில், அக்டோபர் 27ம் தேதி திருப்பூர் - புளியம்பட்டி செல்லும் அரசு டவுன் பஸ், பல்லடம் நோக்கி வந்தது. தெற்குபாளையம் பிரிவில், ஒரு பெண் பஸ்சில் ஏறினார். அவர் டிக்கெட் வாங்கவில்லை. பஸ் ஸ்டாண்டில் இறங்கிய போது, அவர் டிக்கெட் வாங்காதது குறித்து, டிக்கெட் பரிசோதகர் அப்பெண்ணிடம் கேட்டார். இதற்கு, 'ஆண்கள் பகுதியிலேயே நடத்துனர் இருந்ததால், டிக்கெட் எடுப்பதற்குள் பஸ் ஸ்டாண்ட் வந்துவிட்டது' என்றார். ஏற்க மறுத்த பரிசோதகர், 200 ரூபாய் அபராதம் விதித்தார். 'கையில் பணம் இல்லை' என அப்பெண் கூறியதை அடுத்து, நடத்துனரின் 'ஜி பே' எண்ணுக்கு தொகை அனுப்ப பரிசோதகர் கூறியுள்ளார். இதையடுத்து, 200 ரூபாயை அனுப்பிய அப்பெண், அங்கிருந்து சென்றார்.

ரூ.200 அபராதம்

டிக்கெட் பரிசோதகர் செந்தில்வேலனிடம் கேட்டதற்கு, ''பெண்களுக்கு இலவச பயணம் என்றாலும், டிக்கெட் வாங்க வேண்டியது அவசியம். டிக்கெட் வாங்காமல், மொபைல் போனில் அவர் 'பிஸி'யாக இருந்துள்ளார். பஸ் ஸ்டாண்டில் இறங்கியபோது, விதிமுறைப்படி அபராதம் விதிக்கப்பட்டது. ''பணத்தை 'ஜிபே' மூலம் நடத்துனருக்கு செலுத்திய அப்பெண், ரசீது பெறாமல் அங்கிருந்து கிளம்பினார். நடத்துனர் வசூலித்த, 200 ரூபாய் அபராதம் உடனடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது. நடத்துனரிடம் அபராதம் வசூலித்ததற்கான ரசீது வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.

துரதிஷ்டவசமானது

இது குறித்து, அரசு போக்குவரத்து கழகம் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெண் பயணி ஒருவரிடம் பயணச்சீட்டு பரிசோதகர்கள் பயணச்சீட்டு பெறாததால் ரூ. 200 அபராதம் விதித்தது துரதிஷ்டவசமானது. இந்த புகார் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் பயணச்சீட்டு பரிசோதகர்கள் அபராத தொகை பெற்றதும் அதற்கான உரிய ரசீது வழங்குவதற்குள் பயணி அங்கிருந்து சென்று விட்டதாகவும் தெரியவந்துள்ளது.

நடவடிக்கை

இந்த சம்பவம் தொடர்பாக பயணச்சீட்டு பரிசோதகர்கள் மீது துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அபராத தொகையான 200 ரூபாயை பயணியிடமே திருப்பி வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

Saravanan Bala
நவ 02, 2024 08:20

மிகச்சரியான பதிவு. இலவசம் என்றாலும் கணக்கு வேண்டும். ஓட்டு அரசியலுக்காக நிர்வாகம் தடுமாற்றம் கூடாது, காசு கொடுக்காமல் இலவச டிக்கெட் பெறுவதில் என்ன சிரமம்? இது போன்ற செயல்களை அனுமதிப்பதுதான் பல்வேறு விதிமீறல்கள் காரணம்.


AMLA ASOKAN
அக் 31, 2024 07:55

லட்சக்கணக்கான பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்கின்றனர் . என்றோ ஒரு நாள் எங்கோ ஒரு சிறிய சம்பவம் நடந்துவிட்டால் உடனே அரசு சரியில்லை , அந்த துறையே சரியில்லை , அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் , திராவிடத்தால் தான் இப்படி ஏற்பட்டது என கொந்தளிப்பது . இது முழுக்க முழுக்க ஒரு கட்சி சார்ந்த வெறுப்புணர்வுடன் கூடிய அரசியல் பார்வை . குறை சொல்வதே முழு நேர வேலையா ? மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தமிழகத்தில் வாழ்வது மகிழ்ச்சிகரமானது .


KV WOODENPLUG
அக் 31, 2024 06:29

இலவசமாக எதுவும் வேண்டாம்


என்றும் இந்தியன்
அக் 30, 2024 17:49

கிறுக்குப்பயல்கள் உள்ள இடம் திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு என்பது மறுபடி மறுபடி ருசு ஆகின்றது. பெண்களுக்கு பஸ் பயணம் இலவசம். அப்போ டிக்கெட் எதற்கு கொடுக்கவேண்டும். ஆணை டெஸ்ட் செய்தால் ஓகே. இலவசம் டிக்கட் வாங்கவில்லை???என்ன கிறுக்குத்தனமான அபராதம்???


Ram pollachi
அக் 30, 2024 17:46

பயணம் இலவசம் அதனால் வண்டியின் ஆண்கள் பகுதி இருக்கையை கூட ஆக்கிரமித்து விடுகிறார்கள் பணம் கொடுத்து செல்லும் நபர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்... இலவச பயணத்தால் ஷேர் ஆட்டோ, ஆட்டோக்கள், மினி வண்டிகள், கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது... தனியார் பேருந்துகள் கூட மதியம் ஓடுவது கிடையாது.... அரசு டவுன் வண்டியின் உள்ளே தடம் எண் கட்டண விபரம், வரைபடம் ஒருமாதிரி, முன் பின் கண்ணாடி ஸ்டிக்கரில் ஊர் பெயர் தடம் எண் வேறு , எல் ஈ டி விளக்கு பலகையில் கோவை - மதுரை என்று உள்ளது.... பேருந்து எங்கே செல்கிறது என்பதே வியப்பாக இருக்கிறது... இதில் உடனடி கவனம் செலுத்த வேண்டும்.


sahaa Dhevan MSK
அக் 31, 2024 17:19

Mr.Ram, in our city buses separate seats are alloted for ladies, physically challenged, elderly people and general. No separate seats for gents


K.n. Dhasarathan
அக் 30, 2024 16:42

இதில் கேலிக்கூத்து எதுவும் இல்லை நண்பரே இலவச பயணம் என்றாலும் பயண சீட்டு அவசியம், எவ்வளவு இலவசங்கள் போகிறது என்கிற கணக்கை யார் கொடுப்பார் ? அந்த பெண் கொடுக்குமா ? அந்த பயணங்களுக்கும் கணக்கு வேணும், டிக்கெட் பரிசோதகர் செய்தது சரிதான், டிக்கெட் கொடுக்காதது நடத்துனரின் தவறு, அதற்க்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


narayanansagmailcom
அக் 30, 2024 15:39

மாநகர பஸ்சில் மகளிருக்கு இலவச டிக்கெட் கொடுக்கிறார்கள். அதை அவர்கள் என்ன செய்கிறார்கள். வாங்கி கீழே இறங்கியதும் தூக்கி குப்பையில் போட்டு விடுகிறார்கள். அப்போ ஒரு பெண் டிக்கெட் வாங்கவில்லை என்று தெரியும் போது ஒரு டிக்கெட் ஐ எடுத்து கசக்கி போட வேண்டியது தானே. இதுக்கி ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம். திராவிட மாடல் அரசில் படித்தவர்களை பணியில் அமர்ந்தத்துவது இல்லை. TNPSC வழியாக பணியில் அமர்ந்தத்துவது இல்லை. படித்தவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும்.


Dharmavaan
அக் 30, 2024 17:42

மூட டிக்கெட் இன்ஸ்பெக்டர்


பாமரன்
அக் 30, 2024 14:28

முதலில் இந்த கண்டக்டர் சீட்டை ஒழிக்கணும்... உலகமே கண்டக்டர் இல்லாத பஸ்ஸை ஓட்டிக்கிட்டு முன்னேறிக்கிட்டு இருக்கு இவனுவ ஒரு சீட்டை புடிச்சுகிட்டு ஜம்பமா உக்கார்ந்து வர்றானுவ... அதுலேயும் நெடுந்தூர பஸ்களில் இதுக பண்ற அட்றாஸிடி ரொம்ப ஓவர்...


ஆரூர் ரங்
அக் 30, 2024 14:24

அரசுப் பேருந்துகள் இருக்கும் லட்சணத்துல பயணம் செய்வதெல்லாம் ரிஸ்க். பாக்கப் போனா அரசுதான் பயணிகளுக்குக் கட்டணம் தரணும். விபத்து இன்ஷூரன்ஸ் பிரீமியம் கட்ட உதவும். . அரசு பேருந்து பயணிகளுக்கு அரசு விபத்துக் காப்பீடு கிடையாதாம். எத்தனை பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டாலும் அரசே சட்டத்தை மதியாதா?.


Jysenn
அக் 30, 2024 14:13

எல்லாரும் அவனை போல கோமாளிகள் போலும் . கோமாளிகள் ராஜ்யம் .


சமீபத்திய செய்தி