உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரிப்பேர் பார்க்க ஆளில்லை அரசு கேபிள் டிவி திவால்?

ரிப்பேர் பார்க்க ஆளில்லை அரசு கேபிள் டிவி திவால்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:அரசு 'கேபிள் டிவி' நிர்வாகம், ஆப்பரேட்டர்களின் புகார்களை கண்டுகொள்ளாததால், பலர் தனியாருக்கு மாறி வருகின்றனர்.

இது குறித்து, அரசு 'கேபிள் டிவி' ஆப்பரேட்டர்கள் சிலர் கூறியதாவது:

தமிழகத்தில் தற்போது உள்ள 'செட் டாப் பாக்ஸ்'கள், 2016ல் வாங்கப்பட்டவை. இவற்றின் ஆயுட்காலம் மூன்று ஆண்டுகள் மட்டுமே. எனினும் சில பாக்ஸ்கள் உபயோகத்தில் உள்ளன.இவற்றை, எச்.டி., - செட் டாப் பாக்ஸ்களாக தரம் உயர்த்த, அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். கடந்த ஜூன் மாதம், 'தமிழகம் முழுதும் எச்.டி., செட் டாப் பாக்ஸ்கள் வழங்கப்படும்' என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது; இதுவரை வழங்கப்படவில்லை. செட் டாப் பாக்ஸ் பழுதானால், அதை சரிசெய்ய, மாவட்டங்களில் சர்வீஸ் மையங்கள் இல்லை. சிக்னல் பிரச்னை புகார் வந்தால், அதை சரி செய்ய ஆட்கள் கிடையாது. இதனால் ஆப்பரேட்டர்கள், பழுதான அரசு செட் டாப் பாக்ஸை, அரசு கேபிள் நிறுவனத்திடம் ஒப்படைத்து விட்டு, தனியாருக்கு மாறி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

karthik
நவ 07, 2024 13:30

அரசு கேபிள் டிவி திவால் ஆனால் தானே குடும்ப டிவி மென்மேலும்வளரும். சுமங்கலி என்ற குடும்ப கேபிள் நிறுவனம் செய்த ஆட்டூழியங்கள் வெளியில் தெரியாது.. அதை தடுக்க தான் ஜெயலலிதா அரசு கேபிள் டிவி கொண்டு வந்தார்..அவர் இறப்பிற்கு பிறகு அந்த கட்சியை கைப்பற்றியவர் சுநலமாகிப்போக.. மீண்டும் குடும்ப ஆட்சி குடும்ப தொழில் செழித்தோங்க தொடங்கிவிட்டது... அண்ணாமலை தான் காப்பாற்ற வேண்டும்.


அப்பாவி
நவ 07, 2024 07:14

அங்கே இருக்கிற தத்திகளுக்கு ரிப்பேர் கூட பார்க்க தெரியுமா?


Mani . V
நவ 07, 2024 06:03

ரிப்பேர் பார்க்க ஆள் இல்லாமல் இல்லை. சன் டிவி குழுமத்தை வாழவைக்க அரசு செய்யும் மறைமுக உதவிதான் இந்த ஜால்ஜாப்பு.


Mani . V
நவ 07, 2024 06:03

ரிப்பேர் பார்க்க ஆள் இல்லாமல் இல்லை. சன் டிவி குழுமத்தை வாழவைக்க அரசு செய்யும் மறைமுக உதவிதான் இந்த ஜால்ஜாப்பு.


rama adhavan
நவ 07, 2024 05:43

மொத்தத்தில் முந்தய முதல்வர் கூறியப்படி அரசு கேபிள் நிறுவனம் அடக்கமாக இருக்கு போல் இருக்கு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை