உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உள்நோக்கம் இன்றி பெண்ணின் கையை பிடித்து இழுத்தது குற்றமல்ல! உயர் நீதிமன்றம் உத்தரவு

உள்நோக்கம் இன்றி பெண்ணின் கையை பிடித்து இழுத்தது குற்றமல்ல! உயர் நீதிமன்றம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'உள்நோக்கம் இன்றி, பெண்ணின் கையை பிடித்து இழுத்தது குற்றமல்ல. கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனை ரத்து செய்யப்படுகிறது' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்தவர் முருகேசன். இவர், 2015ல் கால்நடை மேய்ச்சலில் ஈடுபட்ட திருமணமாகாத மனநலம் பாதித்த ஒரு பெண்ணின் கையை பிடித்து இழுத்ததாக, பெண்ணின் தாய் சோழவந்தான் போலீசில் புகார் அளித்தார். முருகேசன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தனர். அவருக்கு, 2018ல் மதுரை நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர், உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில், நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா பிறப்பித்த உத்தரவு: ஒரு பெண்ணின் கைகளை, ஒரு ஆண் பிடித்து இழுப்பது என்பது அப்பெண்ணின் கண்ணியத்தை பாதிக்கும் செயலாகும். இருப்பினும் உள்நோக்கம் இன்றி கையை பிடித்து இழுப்பது பெண்ணை அவமதிப்பதாகாது; அது குற்றமும் இல்லை. மேலும், மனுதாரர் கையை பிடித்து இழுத்தார் என்பதற்கு ஆதாரம் இல்லை. நேரில் பார்த்த சாட்சிகளின் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் உள்ளன. மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. சந்தேகத்தின் பலனை மனுதாரருக்கு வழங்கி, அவருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

angbu ganesh
ஆக 13, 2025 12:11

MIND READER நீதிபதிக்கு தெரியுமோ


Kasimani Baskaran
ஆக 13, 2025 11:43

பெரும்பாலும் கிராமங்களில் கையை பிடித்து இழுத்தான் என்றால் அதன் பொருள் பெண்ணை வல்லுறவு செய்வதையே குறிக்கும்.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஆக 13, 2025 11:34

உள்நோக்கம் இன்றி பெண்ணின் கையை பிடித்து இழுத்தது, பாலியல் செய்வதும் குற்றமல்ல என்று சொல்லிவிடுங்கள் ..அந்த சார்களுக்கு வசதியாய் போய்விடும் ...


naranam
ஆக 13, 2025 11:05

அப்போ சும்மா இழுக்கலாம்?


saravan
ஆக 13, 2025 10:48

இந்த உள்நோக்கத்தை நீங்க எப்படி கண்டுபிடிசீங்க


தியாகு
ஆக 13, 2025 07:28

உள்நோக்கம் இன்றி பெண்ணின் கையை பிடித்து இழுத்தது குற்றமல்ல உயர் நீதிமன்றம் உத்தரவு ஹி... ஹி...ஹி... கட்டுமர திருட்டு திமுககாரன்களுக்கு வசதியா போச்சு. மானபங்க படுத்த கையை பிடித்து இழுத்துவிட்டு தங்கச்சியா நினைச்சு கை பிடித்து கூட்டி சென்றேன்னு சொல்லிடுவானுங்க. ஹி...ஹி...ஹி...


நிக்கோல்தாம்சன்
ஆக 13, 2025 07:23

உள்நோக்கமின்றி என்பதனை எப்படி நீதிபதி அறிந்தார் ? ஒரு சாராரின் வாதங்களை மாத்திரம் வைத்து அறிந்து கொண்டுவிட்டாரா ?


பிரேம்ஜி
ஆக 13, 2025 07:02

தீர்ப்பு சொன்னது ஒரு பெண்மணி! எல்லாம் கலிகாலம்!


Ramona
ஆக 13, 2025 06:54

பிடித்த கையை பரந்த மனதுடையவரின் அதே கைகளை மாவு கட்டு போடாம விடுவாங்களா


Nandakumar Naidu.
ஆக 13, 2025 06:54

இவர் நீதிபதிக்கே அருகதை அற்றவர். இவரெல்லாம் நம் நீதிமன்றங்களின் சாபக்கேடு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை