உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம்

ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம்

சென்னை:உள்ளாட்சி தினத்தில் நடக்கவிருந்த, கிராம சபை கூட்டம், இன்று நடைபெற உள்ளது.தமிழகத்தில், சென்னை மாநகரை தவிர, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊராட்சிகளில், ஜனவரி, 26 குடியரசு தினம்; மார்ச் 22 உலக தண்ணீர் தினம்; மே 1 தொழிலாளர் தினம்; ஆக., 15 சுதந்திர தினம்; அக்., 2 காந்தி பிறந்த தினம்; நவம்பர், 1 உள்ளாட்சிகள் தினம் என, ஆறு நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது.தீபாவளி பண்டிகைக்கு மறுநாள், நவம்பர், 1 அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், அன்றைய தினம் கிராம சபை கூட்டம் நடக்கவில்லை. அதற்கு பதிலாக, இம்மாதம் 23ம் தேதி கிராம சபை கூட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை, 11:00 மணிக்கு, அனைத்து ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம் நடக்க உள்ளது.கூட்டத்தில், பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது உட்பட, பல்வேறு தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை