மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
3 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
14 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago
சென்னை: 'மத்திய பட்ஜெட்டில், தமிழகத்தில் நடந்து வரும் இரட்டைப்பாதை மற்றும் புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதால், இனி பணிகள் வேகமாக நடைபெறும்' என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு, 12,173 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில், புதிய பாதைகளுக்கு, 976 கோடி; அகலப்பாதை திட்டங்களுக்கு, 413 கோடி; இரட்டைப்பாதை திட்டங்களுக்கு, 2,214 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.திண்டிவனம் - திருவண்ணாமலை புதிய ரயில்பாதை திட்டத்துக்கு, 100 கோடி; திண்டிவனம் -- நகரி, 350 கோடி; அத்திப்பட்டு - புத்துார், 50 கோடி; ஈரோடு -- பழனி, 100 கோடி; மகாபலிபுரம் - புதுச்சேரி - கடலுார், 25 கோடி; மதுரை- - துாத்துக்குடி, 100 கோடி; ஸ்ரீபெரும்புதுார் - இருங்காட்டுக்கோட்டை - கூடுவாஞ்சேரி, 25 கோடி; மொரப்பூர் - தர்மபுரி திட்டத்திற்கு, 115 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இதுதவிர, திருச்சி- - காரைக்கால் அகலப்பாதை திட்டத்தின் விரிவாக்கமாக நடந்து வரும், நாகப்பட்டினம் - - திருக்குவளை - திருத்துறைப்பூண்டி திட்டத்திற்கு, 150 கோடி; மயிலாடுதுறை -- காரைக்குடி அகலப்பாதை திட்ட விரிவாக்கமான பட்டுக்கோட்டை- - மன்னார்குடி, பட்டுக்கோட்டை- -தஞ்சாவூர் புதிய பாதை திட்டத்திற்கு, 161 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு உள்ளது.இதில், பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் துவக்கப்படாத திட்டம். இதேபோல, காட்பாடி -- விழுப்புரம், சேலம்- - கரூர்- - திண்டுக்கல், கரூர்- - ஈரோடு இரட்டைப்பாதை திட்டங்களுக்கு தலா, 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'தமிழகம், கேரளா மற்றும் ஆந்திரா, கர்நாடகாவில் ஒரு பகுதியை கொண்டுள்ள தெற்கு ரயில்வேக்கு, 12,173 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.'கடந்த சில ஆண்டுகளுக்கு பின், புதிய ரயில் பாதை மற்றும் அகலப்பாதை திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், பல ஆண்டுகளாக நடந்து வரும் புதிய மற்றும் இரட்டைப்பாதை பணிகள் வேகம் பெறும்' என்றனர்.கூடுதல் ரயில் இயக்கலாம்கடந்த, 10 ஆண்டுகளில், புதிய பாதைதிட்டங்கள் எதுவும் முடிக்கப்படவில்லை; முடியும் தருவாயிலும் இல்லை. அதற்கு, போதிய நிதி ஒதுக்காததே முக்கிய காரணம். தற்போது, அதிக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதால், திட்டங்கள் இனி வேகமெடுக்கும். இரட்டைப்பாதை திட்டங்களுக்குபெருமளவு நிதி கிடைத்து இருப்பது, வருங்காலத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க ஏதுவாக இருக்கும்; போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் உதவும். இந்த நிதி ஒதுக்கீடு தேர்தலை கருத்தில் கொண்டதாகவே தெரிகிறது.- மனோகரன்,முன்னாள் தலைவர்,தெற்கு ரயில்வே ஊழியர் சங்கம்
3 hour(s) ago | 3
14 hour(s) ago | 1
14 hour(s) ago