உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அவரு குறை சொல்லலாம்; உண்மை மக்களுக்கு தெரியும்: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

அவரு குறை சொல்லலாம்; உண்மை மக்களுக்கு தெரியும்: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம்: 'எதிர்க்கட்சித் தலைவர் குறை சொல்லலாம். ஆனால் மக்களுக்கு உண்மை தெரியும்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.விழுப்புரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இதுவரை கண்டிராத அளவுக்கு மழை பெய்துள்ளது. பல்வேறு இடங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிக கன மழை பெய்துள்ளது. மாவட்ட கலெக்டர்களை தொடர்பு கொண்டு அறிவுரை வழங்கி உள்ளேன். மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். தண்ணீர் வடிந்த பகுதிகளில் உடனுக்குடன் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

நிவாரணம்

1.29 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள் சேதம் அடைந்து உள்ளன. பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்கப்படும். உயிரிழந்தோர் குடும்பங்கள், கால்நடைகள், சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும். மக்களை பாதிப்பில் இருந்து மீட்டு, இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். பெஞ்சல் புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்ப, மத்திய அரசிடம் கூறுவோம். மத்திய அரசிடம் நிவாரணம் கோருவோம். மழை பாதிப்புகள் தொடர்பாக பார்லிமென்டில் பேச அனுமதிக்கப்படவில்லை.

மீட்பு பணி

குற்றம் சொல்வது தான் எதிர்க்கட்சி தலைவரின் கடமை. இது பற்றி நாங்கள் என்றும் கவலைப்பட்டது இல்லை. இருந்தாலும் நான் சொல்கிறேன். எந்த ஆட்சி சிறப்பாக நடக்கிறது என்று மக்களுக்கு தெரியும். திருவண்ணாமலையில் மீட்பு பணி நடந்து கொண்டு தான் இருக்கிறது. திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் ஐ.ஐ.டி., பொறியாளர்கள் மூலம் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களில் 7,826 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மீட்பு படையினர் தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 147 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Mohanakrishnan
டிச 02, 2024 21:58

ஆமாம் 4000 கோடி எங்கு உள்ளது என்று மக்களுக்கு தெரிந்து விட்டது


Thiagu
டிச 02, 2024 20:42

விடியலுக்கு ஓட்டு மறவாதீர்


Matt P
டிச 02, 2024 18:28

ரொம்ப குனியாதங்கம்மா ...தன்மானத்தோடு நிமிர்ந்து நில்லுங்க. நீங்க யார் வீட்டு அப்பன் பணத்தையும் பெறலை.


joe
டிச 02, 2024 17:40

திராவிடம் என்றாலே ஊழல் என்று அர்த்தமையா .இந்த திராவிடம் தமிழர்களை முன்னேறவிடாது என்பது உறுதி .திராவிட கட்சிகள் எல்லாமே ஊழல் கட்சிகள்தான் . அரசியலை வியாபாரமாகத்தான் செய்றாங்க. ஊழல் வியாபார அரசியல் தேவையா ?


sundarsvpr
டிச 02, 2024 17:00

மழை தொடர்பாக பாராளுமன்றத்தில் பேச அனுமதிக்கப்படவில்லை என்பது தேவையற்ற விமர்சனம். இந்த நம்பிக்கை இல்லாத எண்ணங்கள் ஸ்டாலினை பாதிக்காது. மக்களை பாதிக்கும் மத்திய அரசின் மீது எதிர் மறை எண்ணங்கள் மனசை விட்டு விலகினால் எல்லாமே நன்றாக அமையும்.


sankar
டிச 02, 2024 16:01

நீங்க என்ன சொன்னீங்களாம் சார்


ராஜவேல்,வத்தலக்குண்டு
டிச 02, 2024 16:44

Stalin in more dangerous than Karunanidhi. ha ha ha.


Anand
டிச 02, 2024 16:00

உண்மை மக்களுக்கு தெரிந்தும் உனக்கு ஒட்டு போட்டது தான் இந்த உலகின் எட்டாவது அதிசயம்.


Raj Kamal
டிச 02, 2024 18:57

அது மீண்டும் நடக்கும்.


Jay
டிச 02, 2024 15:43

சொற்ப விலை உள்ள இந்த நிவாரணங்களை வாங்காமல் மக்கள் கேட்க வேண்டியது, இங்கு இருக்கும் நிர்வாகம் ஒழுங்காக இருந்தால் நாங்களே எங்கள் வாழ்க்கையை சம்பாதித்து ஓட்டிக் கொள்வோம் என்றுதான். தேர்தல் வந்தால் காசு கிடைக்கும் என்று நினைப்பதும், காசு கிடைத்தால் கட்சியைப் பற்றியோ கொள்கையை பற்றியோ கவலைப்படாமல் தேர்தல் பரப்புரை செய்வோம், புயல் மழை வந்தால் நிவாரணம் கிடைத்தால் போதும் என்று நினைப்பதும், பிரம்மாண்டமான கட்சி மாநாடுகள் நமக்கு சேர வேண்டிய பணத்தை எடுத்துத்தான் நடத்துகிறார்கள் என்றும் எப்பொழுது நாம் சிந்திக்கப் போகிறோம்?


RAMAKRISHNAN NATESAN
டிச 02, 2024 15:34

அதாவது அந்த நாலாயிரம் கோடி சுவாகா உண்மை மக்களுக்குத் தெரியுமா ?


rajan
டிச 02, 2024 15:26

Do the I A S ooiciers look up to CM for getting advice to take action. Dravida model will appoint their own person of District Admn.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை