உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீட்டில் நுழைந்த கொள்ளையரை வெளிநாட்டிலிருந்து விரட்டியவர்

வீட்டில் நுழைந்த கொள்ளையரை வெளிநாட்டிலிருந்து விரட்டியவர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே பூட்டிய வீட்டில் கொள்ளை அடிக்க புகுந்த மர்ம ஆசாமிகளை வெளிநாட்டில் இருந்தவாறு வீட்டின் உரிமையாளர் விரட்டி அடித்தார்.கன்னியாகுமரி மாவட்டம், கோட்டாறு ரஹமத் கார்டனைச் சேர்ந்தவர் சலீம், 58. இவரது மகன் ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இன்ஜினியராக பணிபுரிகிறார்.கடந்த வாரம் தன் மகனை பார்ப்பதற்காக குடும்பத்துடன் சலீம், மஸ்கட் சென்றார். வீட்டில் 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டிருந்ததால், வெளிநாட்டில் இருந்த நிலையிலும் அடிக்கடி கேமராவை கண்காணித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 11:45 மணிக்கு இருவர் முகமூடி அணிந்து வீட்டுக்குள் நடமாடுவதைக் கண்டார். இருவரும் கையுறை அணிந்திருந்தனர். வீட்டில் ஒவ்வொரு அறையாக சென்று கதவை உடைக்க முயற்சித்தனர். இதைப் பார்த்த சலீம், உடனடியாக பக்கத்து வீட்டில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு தன் வீட்டுக்குள் இரு கொள்ளையர் புகுந்துள்ள தகவலை கூறியுள்ளார்.அவர்களும், வீட்டில் இருந்து வெளியே வந்து, 'திருடன், திருடன்' என கூச்சலிட்டனர். இதனால், கொள்ளையர் பின் கதவை திறந்து பின்பக்க சுவர் வழியாக ஏறிக் குதித்து, தப்பி சென்று விட்டனர். கோட்டார் போலீசார் சம்பவ இடத்தில் விசாரித்தனர். கொள்ளை முயற்சி நடந்த வீட்டின் அருகே, கட்டட வேலை நடந்து வருகிறது. அங்கிருந்த சிலரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Edwin Jebaraj T ,Tenkasi
ஜன 02, 2025 08:47

இவ்வளவு evidence வலைதளத்தில் வந்த பிறகும் நம்ம போலீஸ் ஒருத்தரையும் பிடிக்கப் போறது இல்ல. நமக்கு ஹெல்மெட் கேஸ் தான் முக்கியம். கொலை கொள்ளை கற்பழிப்பு கேஸ் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்? தமிழ்நாடு மனிதர்கள் வாழத் தகுதியில்லாத மாநிலமாக மாறி பல ஆண்டுகள் ஆகி விட்டது ?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 02, 2025 10:06

சுவரொட்டி மீது எதையோ வீசியெறிந்த பாட்டியைப் பிடிக்க தனிப்படை ....


Kasimani Baskaran
ஜன 02, 2025 08:45

கேரளாவில் இது போல பல கோடிகளை கொட்டி வீடுகள் கட்டி அனாதையாக விட்டு திரும்பவும் அரேபிய பாலைவன பண மோகத்தில் பலர் மூழ்கித்திளைக்கிறார்கள். பணம் என்பது தேவைதான் - ஆனால் அதை சாப்பிட முடியாது என்பதை இதுகள் புரிந்து கொள்ள வேண்டும்.


xyzabc
ஜன 02, 2025 07:26

Smart house owner


karupanasamy
ஜன 02, 2025 06:50

முன்னாள் அமைச்சர் வருவாய் இல்லாததால் மீண்டும் பழைய தொழிலை தொடங்கியிருப்பான்.


Barakat Ali
ஜன 02, 2025 06:41

ஆள் நடமாட்டம் இல்லாத வீடு என்பதால் கட்டட வேலை செய்துவந்தவர்கள் நோட்டமிட்டிருப்பார்கள் ...


Sankare Eswar
ஜன 02, 2025 06:32

அந்த தொகுதி தீய மூடர் கழக மாவட்ட செயலாளரை பிடித்து செவிலி அறைந்தால் சொல்லிவிடுவான்... அவன் மட்சான்தான் அவன் என்று.


Karthikeyan Palanisamy
ஜன 02, 2025 02:45

வேற யாரா இருக்கும் உடன்பிறப்புகளாகத் தான் இருக்கும்


மோகன்
ஜன 02, 2025 01:48

தமிழ்நாடு போலீசார் ..... இவர்களே திருடனின் கூட்டாளிகளாக இருப்பார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை