உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கனமழை: 10 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை: 10 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை: கனமழை காரணமாக, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(ஜன.,8) விடுமுறை அறிவித்து, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.* கனமழை காரணமாக, திருவண்ணாமலை, வேலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில், பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.* நாகையில், நாகபட்டினம், கீழ்வேளூர் தாலுகாக்களை சேர்ந்த பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம், திருக்குவளை தாலுகாகளில், பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.* புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கும், காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று கனமழை அறிவிக்கப்பட்டுள்ளது.* அதிகபட்சமாக சீர்காழியில் 22 செ.மீ, திருவாரூரில் 21.2 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

11 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

வங்கக்கடலின் தென் மேற்கு பகுதியிலும், தென் கிழக்கு பகுதியிலும், வளிமண்டல கீழடுக்கில் தலா ஒரு சுழற்சி நிலவுகிறது. இதனால், வங்கக்கடலின் தென் மேற்கு, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில், இன்று முதல், 10ம் தேதி வரை மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். வரும், 11ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும். சென்னையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

rasaa
ஜன 08, 2024 12:26

உச்சம் தொட்டவர்களில், காசு கொடுத்து பயணச்சீட்டு வாங்கமுடியாமல் விலையில்லா பயணம் மேற்கொண்டவரும் அடக்கம்.


Ramesh Sargam
ஜன 08, 2024 07:01

மழைக்கு முன்பு மாநில அரசு எந்தவித வொரு முன்னெச்சரிக்கைகளையும் எடுத்து மக்களை காப்பாற்றாது. மழை பெய்து நகரம் நாசம் ஆனபின்பு முதல்வர் டெல்லி சென்று நிவாரணம் கேட்பார். கிடைப்பதில் ஒரு பகுதியை மக்களுக்கு வீசிவிட்டு, மீதியை 'கலைஞர் 100' விழா, கருப்பு கார்கள் என்று வாங்கி செலவழிப்பார். பிறகு மத்திய அரசு தமிழகத்துக்கு ஒன்றும் செய்யவில்லை என்பார். அவர் மகன் "அவன் அப்பன் வீட்டு பணமா" என்று ஏதோ உளறுவான்.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ