உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கோவை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தின் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (ஜூலை 01) விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அருணா அறிவித்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=l708ahen&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இருப்பினும் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் வரும் 6ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பில்லை. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் பகல் நேர வெப்பநிலை 34 டிகிரி வரை பதிவாகும். மாலை நேரங்களில் திடீர் மழைக்கு வாய்ப்புள்ளது. வங்கக்கடலில் ஒரு வாரமாக வீசிய சூறாவளி காற்று, பெரும்பாலான பகுதிகளில் நின்று விட்டது. இவ்வாறு வானிலை மையம் மேலும் அறிவித்துள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ