மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரிகள் இன்று இயங்கும்
17-Oct-2024
கோவை: கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (அக்.,22) செவ்வாய் மாலை முதல் கனமழை பெய்து வருகிறது.இடி மின்னலுடன் கூடிய கனமழை காரணமாக, கோவை மாவட்டத்தில் இன்று (அக்.,22) மாலை 5 மணி முதல் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. தீபாவளிக்காக கடைகளுக்கு பொருட்கள் வாங்க சென்ற பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.கோவை விமான நிலையத்தில் இன்று (அக்.,22) மாலை பெய்த மழை அளவு 70 மில்லி மீட்டர் என்ற அளவில் பதிவானது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பதிவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
17-Oct-2024