உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சொத்து வரி முறையாக நிர்ணயம் செய்துள்ளார்களா; தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு

சொத்து வரி முறையாக நிர்ணயம் செய்துள்ளார்களா; தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரை சொத்து வரி விதிப்பு முறைகேடு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை, தமிழகம் முழுவதும் வரி விதிப்பு முறையாக செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டுள்ளது.மதுரை மாநகராட்சி சொத்து வரிவிதிப்பு முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி வழக்கு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. ஏற்கனவே உயர் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் மதுரை போலீஸ் டி.ஐ.ஜி. தலைமையிலான சிறப்பு குழு வரிவிதிப்பு முறைகேடுவை விசாரித்து வருகிறது. மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள அசையா சொத்துகளுக்கு விதிக்கப்பட்டுள்ள சொத்து வரி முறையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வது தொடர்பான அறிக்கையை மாநகராட்சி கமிஷனர் நேற்று தாக்கல் செய்தார்.அதில் 100 வார்டுகளுக்கும் 100 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆய்வு செய்வதற்கு இரண்டு கட்டங்களாக 4 மாதங்கள் கால அவகாசம் தேவைப்படும் எனக் குறிப்பிட்டார். இதை ஏற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு, 'இதுபோல் தமிழகத்தில் உள்ள பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் செயல் திட்டத்தை வகுத்து ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள சொத்து வரி முறையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்,' என உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Kalyanaraman
செப் 01, 2025 18:11

The rules were not properly followed while changing the property tax rates. I request Honourable High Court to examine the legality of tax process of increasing tax rates or tax modifications.


ManiMurugan Murugan
ஆக 27, 2025 00:04

அருமை கண்டிப்பாக நடத்தப் பட வேண்டும் தேர்தல் ஆணையத்தில் சொத்து மதிப்பீடு குறைவாக தவறாக கொடுத்துள்ளது அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோகன் கட்சி தி மு கா கூட்டணி


ManiMurugan Murugan
ஆக 27, 2025 00:01

அருமை


MUTHU
ஆக 26, 2025 21:32

தீர்ப்பு வருவதற்குள் பத்து முறை உயர்த்தப்பட்டு மொள்ளை போடப்பட்டிருக்கும்.


k.c. venkatachalam kcv chalam
ஆக 26, 2025 20:21

நல்ல தீர்ப்பு. ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒரு முறை மாநகராட்சி, நகராட்சிகளில் வரி சீராய்வு செய்யப்பட வேண்டும். கடைசியாக 1969-70, 1970-71ல் நடைபெற்றது. 1974-75 ல் தொடர்ச்சியாக வரட்சி காரணமாக டாக்டர் கலைஞர் ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டாக ஒத்தி வைக்கப்பட்டது. அடுத்து 1977ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எம்ஜிஆர் அவர்கள் 1986 வரை ஒத்தி வைத்து 1987ல் பயிற்சி இல்லாத அதிகாரிகளை நியமித்து வரி சீராய்வு செய்ததால் ரகசியம் வெளியாகி ரத்து செய்யப்பட்டு அப்போது இருந்துதான் 50, 75,100,200 சதவீதம் என்ற விகிதாசார அடிப்படையில் வரி உயர்வு செய்யம் நடைமுறை வந்தது. இதன் காரணமாக வரி உயர்வு செய்ய தேவைப்படாத கட்டிடங்கள் கூட வரி உயர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை சிறப்பு தனியதிகாரிகள் ஸ்பெஷல் ரிவிஷன் ஆபீஸர்கள் நியமனம் செய்யப்பட்டு 100% கட்டிடங்கள் ஆய்வு செய்யாமலேயே வரி உயர்வு செய்தனர். இதனால் சீரற்ற, ஏற்ற தாழ்வு டன் கூடிய வரி உயர்வு செய்யப்பட்டு பொதுமக்களின் அதிர்ப்திக்கு ஆளாக நேரிட்டது. கட்டிட மதிப்பு இடத்தின் விலை உயர்வு, வாடகை உயர்வுகள் குடியிருப்பு, வணிகம், தொழிற்சாலை போன்றவை முறையாக கவனத்தில் கொள்ளாமல் அரசியல் அழுத்தத்தின் காரணமாக ஏற்ற தாழ்வுடன் வரி நிர்ணயம் செய்தனர். காலியிடத்திற்கு ரூ1000/- கிரயம் மதிப்பிற்கு ரூ.7.50 அரையாண்டு வரி என்ற நிலையில் இருந்து இப்போது சதுர அடி கணக்கில் வரி நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இந்த காலிநில வரி கட்டிடம் கட்டி சொத்து வரி விதிப்பு செய்யும் கட்டிடங்களுக்கு மட்டுமே வசூலிக்கப்படுகிறது. 100% காலியிடத்திற்கு வரி இல்லை. பத்திரப் பதிவு அலுவலகத்தில் இருந்து பதிவாகும் அனைத்து பத்திரங்கள் தொடர்பான "எம் நோட்டீஸ்" பெற்று வரி நிர்ணயம் செய்யும் நடைமுறை கைவிடப்பட்டது. பஞ்சாயத்தில் கூட அங்கீகரிக்கப்பட்ட கட்டிட வரைபட நகல் பெற்று ச.அடிக்கு ரூ1/- ஆண்டு வாரியாக முறையாக வசூலிக்கின்றனர். ஆனால் மாநகராட்சி மற்றும் நகராட்சிகள் இப்படி நீதிமன்றத்திற்கு பதில் கூற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது வேதனையான விஷயம். நன்றி.


peermohammednurullaraja peermohammednurullaraja
ஆக 26, 2025 18:37

பணக்காரர்கள் மற்றும் கோடிஸ்வரர்கள் சொத்துவரி செலுத்தி இருக்க மாட்டார்கள்.இவர்களை ஆய்வு செய்ய வேண்டும்.


Tamilan
ஆக 26, 2025 17:46

இந்தியா முழுமைக்கும் உத்தரவிட இவர்களுக்கு அதிகாரமில்லையா


somasundaram ramaswamy
ஆக 26, 2025 16:48

கிராமங்களில் ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பலவற்றிலும் பழைய வீட்டை இடித்து பல லட்சங்கள் செலவழித்து புது வீடுகள் காட்டியுள்ளார்கள் ஆனால் கட்டிட பிளான் மற்றும் பெயர் மாற்றாமல் அரசை ஏமாற்றி பழைய சொற்ப வீட்டு வரியே பல ஆண்டுகளாக கட்டி வருகிறார்கள். இதை நிர்வாகமும் அரசும் கண்டு கொள்வதில்லை.


Kasimani Baskaran
ஆக 26, 2025 16:23

நில பரிவர்த்தனைதான் அதிக கருப்புப்பணத்தை உருவாக்குகிறது. பத்திரப்பதிவுக்கட்டணம் குறைவாக வரவேண்டும் என்பதற்காக நிலத்தில் உண்மையான விலையை ஒருவரும் சொல்வது கிடையாது.


joe
ஆக 26, 2025 16:20

பேரூராட்சியில் உள்ள அலுவலக வூழியர்கள் வசதிபடைத்த என்ஜினீயர்கள் மற்றும் பணக்காரர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு மாற்று சான்றிதழை மாற்று பதிவு என்னை வழங்குகிறார்கள் .


சமீபத்திய செய்தி