உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஹாக்கி ஜூனியர் உலகக்கோப்பையில் ஆப்பு வைக்கும் ஆப்: டிக்கெட் குளறுபடி பரிதாபங்கள்

 ஹாக்கி ஜூனியர் உலகக்கோப்பையில் ஆப்பு வைக்கும் ஆப்: டிக்கெட் குளறுபடி பரிதாபங்கள்

மதுரை: மதுரையில் நடக்கும் ஹாக்கி உலகக் கோப்பையை பார்ப்பதற்காக புக்கிங் செய்யும் 'ஆப்'பில் ஏகப்பட்ட குளறு படிகள் உள்ளதால் ஹாக்கி ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர். மதுரை ரேஸ்கோர்ஸ் ஹாக்கி மைதானத்தில் நவ.28 முதல் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை லீக் போட்டிகள் நடந்து வருகின்றன. சொந்த மண்ணில் களம் காணும் இந்திய அணி 9 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வெல்லும் முனைப்பில் சிறப்பாக ஆடி வருகிறது. நவ.29ல் ஓமனுக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் 17--0 என்ற கோல் கணக்கில் அந்த அணியை பந்தாடியது. தனது கடைசி லீக் போட்டியில் நாளை (டிச., 2) சுவிட்சர்லாந்து அணியுடன் மோத உள்ளது. மதுரையில் நடக்கும் இந்த ஆட்டத்தை பார்ப்பதற்கு முதல் நாளில் இருந்தே ஏகப்பட்ட 'டிமாண்ட்' உள்ளது. ஆனால் இதற்கான 'ஆன்லைன் டிக்கெட் புக்கிங்' இன்னும் துவங்கவில்லை. இதனால் 'மேட்சை மிஸ்' செய்து விடுவோமோ என்ற கலக்கத்தில் ஹாக்கி ரசிகர்கள் உள்ளனர். மதுரையில் முதன்முதலாக உலகக்கோப்பை நடப்பதால் ஹாக்கி தெரியாதவர்கள் கூட, வெகுதொலைவில் இருந்து போட்டியை காண வருகின்றனர். ஆனாலும் நேற்று மாலை 6:00 மணி வரை முன்பதிவு தொடங்கவில்லை.

டிக்கெட் குளறுபடிகள்

போட்டிகளுக்கு டிக்கெட்டுகள் 'புக்' செய்ய உதவும் 'Ticketgenie' ஆப்பில் புக்கிங் துவங்கிய சில நாட்களிலேயே இந்திய அணி ஆட்டம் தவிர மற்ற ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன. ஆனால் நேற்று முன்தினம் (நவ., 28) காலையும் டிக்கெட்டுகளை புக் செய்யலாம் என 'ஆப்'பில் காட்டியதால் ரசிகர்கள் ஆனந்த அதிர்ச்சி அடைந்தனர். ஒரு அக்கவுண்டில் 4 டிக்கெட்டுகள் மட்டுமே பெற முடியும் என்பதால், மற்றொரு இ மெயில், போன் நம்பர் மூலம் டிக்கெட்டுகளை அள்ளினர். சிலருக்கு டிக்கெட்டுகள் காட்டினாலும் புக் செய்ய முடியவில்லை. நேற்று மதுரை மைதானத்திற்கு ஆன்லைன் டிக்கெட்டுடன் வந்தபோதும் 'கியூ.ஆர்.,' கோடு 'ஸ்கேன்' ஆகவில்லை. பின்னர் ஸ்கேன் செய்யாமலே ரசிகர்களை அனுமதித்தனர். இது போன்ற டிக்கெட் குளறுபடிகளால் ஒரு பக்கம் பெரும்பாலான இருக்கைகள் காலியாகவும், மற்றொரு பக்கம் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் குறித்து விழிப்புணர்வு இல்லாததால் ரசிகர்கள் ஆசையாய் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி