உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இலங்கை பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துங்க; பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இலங்கை பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துங்க; பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமர சூரியா உடன் மீனவர்கள் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்துமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை. இந்தியாவுக்கு வருகை தந்துள்ள அந்நாட்டு பிரதமரிடம் பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும்.தமிழக மீனவர்கள் பிரச்னையில் தூதரக நடவடிக்கை மூலம் மத்திய அரசு தலையீட்டை தொடர்ந்து கோரி வருகிறோம். தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு 72 முறை கடிதம் எழுதியுள்ளேன் மாநில அரசின் முறையான ஒப்புதலை பெறாமல் மத்திய அரசால் கச்சத்தீவு இலங்கைக்கு மாற்றப்பட்டது. தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமைகளை மீட்டெடுக்க இலங்கை பிரதமரிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் நீண்ட கால மற்றும் துயரமான பிரச்னைகளை தீர்க்க இது மிகவும் முக்கியமானதாகும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

Rajasekar Jayaraman
அக் 17, 2025 14:45

அவர்களுக்குள் போட்டி நடக்கிறதோ.


Venugopal S
அக் 17, 2025 13:13

இலங்கை அரசுடன் பேசச் சொல்வது நியாயம் இல்லை!


பாலாஜி
அக் 17, 2025 12:43

மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எழுதிய கடிதங்கள் ஏதாவது பலனளித்துள்ளதா?


priyan vadai
அக் 17, 2025 08:37

நாலு வாடகை வாயர்களை விட்டு அறிக்கை கண்டனம் தெரிவித்து காசா பேரை முடிவுக்குக் கொண்டு வந்த மாதிரி இதற்க்கு செய்யலாமே. செய்வீர்களா?


suresh Sridharan
அக் 17, 2025 08:36

தமிழகத்தில் இங்கேயே ஒன்றும் தெரியாது தலைவர் எப்படி அங்கே


surya krishna
அக் 16, 2025 21:15

இலங்கை தமிழர்களை கொன்னு குவிச்ச கூட்டணி நீங்க இப்ப திடீர்னு இலங்கை தமிழர் மேல பாசமா? கச்சத்தீவு கொடுத்ததும் நீங்கதான். இந்த ரெண்டுக்கும் மோடி தான் கேட்கணுமா. ஏன் இந்த நாடக அரசியல். நாலு வருஷம் ஒண்ணுமே செய்யலன்னு கடைசி காலத்துல இருக்கிறது தேவையில்லாத விஷயத்தில் எல்லாம் மூக்கை நீட்றீங்க.,.


Mr Krish Tamilnadu
அக் 16, 2025 20:14

தமிழக மாநில பிரதிநிதிகள், மத்திய அரசின் வெளியுறவு துறை, இலங்கை பிரதிநிதிகள் இவர்கள் மூவரும் கூட்டாக பேசும் போது தான், தீர்வுக்கான கதவுகள் என்ன என்பது தெரிய வரும். தமிழக அரசின் பிரச்சினை மற்றும் அதற்கான தீர்வாக தமிழகம் நினைப்பது இதை தெளிவு படுத்தி முன்கூட்டியே வெளியுறவு துறையிடம் சொல்ல வேண்டும். கூட்டு மீட்டிங்க்கு ஏற்பாடு செய்ய சொல்ல வேண்டும். அதற்கு மத்திய அரசு முடிவு செய்யும். அப்போது தான் தீர்வை நோக்கி செல்லும். நமது பிரச்சினை நமக்கு தான் தெரியும். மத்திய அரசை மீறி நம்மால் எதுவும் செய்ய முடியாது என்றால், ஒரு கூட்டு முயற்சியில் தான் போக வேண்டும். பேசி தீர்வு காணுங்கள் என கடிதம் எழுதினால் மட்டும் போதாது. தேவை உள்ளவர்கள் முன்னால் நிற்க வேண்டும்.


R.MURALIKRISHNAN
அக் 16, 2025 19:12

அப்ப ஆட்சி முழுவதும் லெட்டர் தான் எழுதிகினி இருந்தீங்களா,? ஆட்சி நடத்துல. இதை நாங்களே பண்ணியிருப்போமிலே.பில்டிங்குக்கு பேர வெக்கிறது. பித்தலாட்டம் பண்றது. இதைத்தான செஞ்சுகினு இருந்தே. இன்னும் 5 மாசம் கழித்து உங்களுக்கும் உங்க கூட்டமும் நிரந்தரமா ஊட்டுக்கு போயி கில்லி விளையாடலாம்.


Saai Sundharamurthy AVK
அக் 16, 2025 19:05

ஸ்டிக்கர் முதலமைச்சர். மூன்று நாள் பயணமாக இலங்கை பிரதமர் இந்தியாவுக்கு நமது பிரதமருடன் பேசத் தான் வந்திருக்கிறார். பின்னே ஸ்டாலினுடன் பேசவா வந்திருக்கிறார் !!!! ஒட்டுண்ணி கூட ஸ்டிக்கர் ஒட்டி வாழாது.


Kjp
அக் 16, 2025 18:53

பாராளுமன்ற எம்பி கனிமொழிக்கு இலங்கை மிகவும் பரிச்சயமானது தான். அவருடைய தலைமையில் 40 எம்பிக்களும் உடன் சென்று இலங்கை. பிரதமரை சந்திக்கலாமே. யாரும் தடுக்கவில்லையே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை