உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 37 ஆண்டு பணிக்கு கவுரவம்; குடும்பத்தினர் செயலால் அரசு பஸ் டிரைவர் நெகிழ்ச்சி

37 ஆண்டு பணிக்கு கவுரவம்; குடும்பத்தினர் செயலால் அரசு பஸ் டிரைவர் நெகிழ்ச்சி

திருப்பூர்: அரசு பஸ் டிரைவராக பணியாற்றி, ஓய்வு பெற்ற தந்தைக்கு மகனும், மகளும் மொபைல்போன், வாட்ச் வழங்கி, சந்தன மாலை அணிவித்து வீட்டிற்கு அழைத்து சென்றனர்.கோபி, வலையபாளையம் பகுதியை சேர்ந்தவர், முருகன், 59. அரசு போக்குவரத்து கழகத்தில், 37 ஆண்டுகள் பணியாற்றி திருப்பூர் கிளையில் இருந்து செப்., 30 ல், ஓய்வு பெற்றார். ஓய்வு பெறும் நாளை விழாவாக கொண்டாட முடிவு செய்த குடும்பத்தினர், டிப்போ அதிகாரிகளிடம் ஒப்புதல் கேட்டு பெற்றனர். ஓய்வு நாளான்று காலை, டிப்போவில் உள்ள கோவிலில் குடும்பத்தினர் பூஜை செய்தனர். பிறகு, கேக் வெட்டி, டிப்போ ஊழியர்களுக்கு வழங்கினர். முருகனுக்கு இன்ப அதிர்ச்சி வழங்கும் வகையில் மகன் வசந்தகுமார் புதிய மொபைல் போனையும், மகள் திவ்யா தங்க வாட்ச்சையும் பரிசாக வழங்கினர். மனைவி விமலா, திருஷ்டி சுற்றிப் போட்டார். குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை, தான் ஓட்டிய பஸ்சில் அமர வைத்து டிப்போவுக்கு உள்ளேயே ஒரு முறை முருகன் சுற்றி வந்தார். பிறகு அவருக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பொன்னாடை, சந்தானமாலை அணிவித்து வீட்டிற்கு அழைத்து சென்றனர்.முருகன் கூறுகையில்,' 1986ல் சத்தியமங்கலத்தில் பணியில் சேர்ந்தேன். அரசு பஸ் டிரைவராக பணியாற்றுவது சவால் மிகுந்த பொறுப்பு. 37 ஆண்டு பணியாற்றி ஓய்வு பெறுவது திருப்தியளிக்கிறது. குடும்பத்தினர் செய்த ஏற்பாடு எதிர்பார்க்காதது. போக்குவரத்து அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Bhaskaran
அக் 08, 2024 12:39

நீண்ட காலம் குடும்பத்தோடு வாழ வாழ்த்துக்கள்.


Ramesh Trichy
அக் 08, 2024 10:11

வாழ்த்துக்கள்


M Ramachandran
அக் 07, 2024 20:33

குடும்ப சொந்தகளுடன் நீட் வாழ வேண்டும்


Srinivasan Ramabhadran
அக் 07, 2024 19:56

திரு முருகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். திரு முருகன் அவர்களுக்கு மனநிறைவுடன் ஆரோக்கியமான ஓய்வு வாழ்க்கை அமைய நல்வாழ்த்துகள்.


Ohhm Prakash
அக் 07, 2024 16:48

1986 இல் சேர்ந்து இருப்பதாக கூறி இருக்கிறார்கள்.


கண்ணன்,மேலூர்
அக் 07, 2024 19:11

அதெல்லாம் இருக்கட்டும் ஓய்வூதியம் கொடுத்ததா இந்த விடியா திமுக அரசு?


THINAKAREN KARAMANI
அக் 07, 2024 16:09

"முருகன் கூறுகையில், 1986ல் சத்தியமங்கலத்தில் பணியில் சேர்ந்தேன்." இந்த ஆண்டோடு 37 ஆண்டுகள் இவ்வளவு காலம் பணியில் நல்லபடியாக இருந்து இப்படி மனைவி மக்களோடு ஓய்வு பெறுவதை ஒரு விழாவாக கொண்டாடி ஓய்வு பெறுவது என்ற வாய்ப்பு எல்லோருக்கும் கிட்டாது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்


Hari Baskar AK
அக் 07, 2024 15:17

முருகன் ஐயா, தங்களின் அப்பழுக்கற்ற பணிநிறவைக்கு, தமிழக மக்களின் ஏகோபித்த பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள் பல. தாங்கள் நூறாண்டு காலம், சந்தோசமாகவும், நிம்மதியாகவும், நல்ல ஆரோக்கியத்துடனும், வாழ எல்லாம் வல்ல, பகவானை, வேண்டிகொள்கிறோம்.


Palanisamy Sekar
அக் 07, 2024 14:53

அரசு செய்ய வேண்டியதை குடும்பத்தினர் செய்தது பாராட்டுக்கு உரியது. காரணம் ஓய்வுபெறுகின்ற ஊழியர்களுக்கான ஓய்வூதியம் கொடுக்க பணமில்லை என்று சொல்லி நோகடித்து வெளியேற்றுவார்கள். அதனை அறிந்த குடும்பத்தார் இப்படி ஒரு நிகழ்வினை செய்து உழைத்தவருக்கு பெருமை சேர்த்தார்கள். வெட்கப்பட வேண்டியது ஓய்வூதியம் கூட தரவக்கில்லாத அரசுதான். அன்னாரின் உழைப்புக்கு பின்னர் நிம்மதியான வாழ்க்கை வாழ இப்போதே குடும்பத்தினர் அதனை செய்து காட்டிவிட்டார். நல்ல குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்.


KayD
அக் 07, 2024 14:35

அருமை. 1996 பணியில் சேர்ந்தேன் 37 வருஷம் பணி.. கூட்டி கழிச்சி பார்த்தால் 28 வருஷம் தானே ஆகுது.. May be மொத்த சர்வீஸ் aa irukum போல.. வாழ்த்துக்கள்


panneer selvam
அக் 07, 2024 15:10

Bus route was nationalized in 1996 .


கல்யாணராமன்
அக் 07, 2024 16:16

1986ல் சேர்ந்தததாக சொல்லியுள்ளார்.


Muralidharan raghavan
அக் 07, 2024 16:51

சரியாக படிக்கவும் அது 1986


sundarsvpr
அக் 07, 2024 14:32

பணியிலிருந்து ஓய்வு பெற்ற அன்று பெற்ற மகன் மகள் உடன் இருப்பது அபூர்வுமான செய்தி. மகிழ்ச்சிகரமான செய்தி. இந்த இன்ப நிகழ்வுகள் பெருபான்மையானவர்களுக்கு கிடைப்பது இல்லை. காரணம் மகன் மகன்கள் உறவினர்கள் வெளிநாட்டில் இருப்பதால். மன ஆறுதல் வாட்ஸ் ஆப் தொலைபேசி மூலம் பார்ப்பது பேசுவது.. கொடுப்பினை ஆண்டவன் சித்தம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை