உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நோயாளி போல் சென்று மருத்துவமனையில் ஆய்வு; கலெக்டருக்கு குவியும் பாராட்டு

நோயாளி போல் சென்று மருத்துவமனையில் ஆய்வு; கலெக்டருக்கு குவியும் பாராட்டு

பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம், கொளக்காநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், குடும்ப கட்டுபாடு செய்து கொண்ட பெண் ஒருவர், அந்த மருத்துவமனையில் முறையான பராமரிப்பில்லாததால், தான் அவதியுறுவதாக பெரம்பலுார் கலெக்டர்மிருணாளினிக்கு, 'வாட்ஸ் ஆப்' மூலம் புகார் செய்தார். இதையடுத்து அன்றிரவு, சாதாரண உடையில், கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, கலெக்டர்மிருணாளினி சென்றார். அங்கிருந்த நர்சிடம், தனக்கு உடல் நலக்குறைவு என கூறியுள்ளார். உடலை பரிசோதிக்காமல் ஊசி போட வந்த நர்ஸிடம், 'டாக்டர் இல்லையா... எங்கே?' என கேட்டு, கலெக்டர் கடிந்து கொண்டார். இதன்பின் தான், வந்திருப்பது கலெக்டர்என உணர்ந்த நர்ஸ்கள் திகைத்தனர். அங்கு, மருத்துவ பதிவேடுகள் எதுவும் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்ததை கண்டறிந்தகலெக்டர், நர்ஸ்கள் மீதும், பணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத டாக்டர் மீதும்,துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, சுகாதாரத்துறை துணை இயக்குநருக்கு உத்தரவிட்டார். கலெக்டரின் இந்த செயல், பொதுமக்களிடம் பாராட்டுக்களை பெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Mani . V
செப் 22, 2025 06:42

அப்பா போல் இதுவும் ஷூட்டிங் இல்லாமல் இருந்தால் சரி.


N Annamalai
செப் 18, 2025 07:10

வாழ்த்துக்கள்


Natchimuthu Chithiraisamy
செப் 17, 2025 16:57

பரட்டவேண்டியதுதான். உயர் அதிகாரிகள் தன் வேலையை சிறப்பாக செய்யவேண்டும் என்றால் இது போல் தான் இருக்கவேண்டும். மாத சம்பளம் 200000 உயர்ந்த பதவி என்று தானும் சொந்தமும் பெருமை பேசுவது அல்ல. அந்த சம்பளத்திற்கு உரிய வேலை செய்தல் வேண்டும்.


VSMani
செப் 17, 2025 11:29

ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும் வாட்ஸப் குரூப் வைத்திருந்தால் நல்லது. நெல்லை கலெக்டர் வாட்ஸப் குரூப் நம்பர் கிடைக்குமா?


MUTHU
செப் 23, 2025 19:09

இப்பவே அவருக்கு transfer ஆர்டர் தயாராயிருக்கும்.


Shunmugham Selavali
செப் 17, 2025 10:32

அரசு பணியில் உள்ளவர்களின் மனநிலை: எப்படியாவது அரசு வேலையில் சேர்ந்திட வேண்டும் அது போதும், பிறகு எல்லா சலுகைகளையும் அனுபவிக்கனும், முடிந்தவரை மக்களை அலைக்கழித்து காலத்தை கடத்த வேண்டும், வேலைக்கு ஏற்றபடி லஞ்சம் வசூலித்து சொத்து வாங்கனும், மாத சம்பளம் 100% மிச்சம் ஆகனும் அவ்வளவுதான். மனசாட்சி, நேர்மை, கடமை எல்லாம் கிடையாது.


Kamaraj TA
செப் 17, 2025 10:04

பத்து பதினைந்து வருடமாக பட்டா வழங்காமல் தாசில்தார்கள் வேலை பார்க்கின்றனர். வாரிசு சான்றிதழ் மற்றும் வருவாய்த்துறையில் பெறும்எந்த சான்றிதழுக்கும் லஞ்சம் தராமல் எதுவும் நடப்பதில்லை. இதையெல்லாம் சரி செய்து முதலில் தன்னுடைய துறையை ஒவ்வொரு கலெக்டரும் சரி செய்யாமல் தேவையில்லாத ஒரு விளம்பரம்.


Venkataraman
செப் 17, 2025 08:52

அந்த கலெக்டரை உடனே வேறு இடத்துக்கு, தண்ணி இல்லாத காட்டுக்கு, மாற்றி விடுவார்கள். எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இதே நிலைமைதான். இதையெல்லாம் திருத்தவே முடியாது.. யாராவது திருத்த நினைத்தால் அவர்கள் பாடு ஆபத்து.


Kanns
செப் 17, 2025 08:49

Good Works


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 17, 2025 07:26

இதுலேந்து என்ன தெரியுதுன்னா, எந்தெந்த மாவட்ட கலெக்டருங்களுக்கு ட்ரான்ஸ்பர் வேணுமோ அவங்க எல்லாம் அருகிலுள்ள சார் ஆஸ்பத்திரிக்கு சோதனைக்கு போனா நிச்சயமா டிரான்ஸ்பர் கிடைக்கும்


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 17, 2025 07:23

அது சரி ,அது என்னங்க சாதாரண உடையில் போனார்னு போட்டு இருக்கீங்க? மதுரை கலெக்டர் சங்கீதா மாதிரி கருப்பு சிவப்பு யூனிபார்ம் போட்டுட்டு போகலைன்னு சொல்லவேண்டியதுதானே .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை