உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீடுகளை உடைத்து நகைகள் கொள்ளை

வீடுகளை உடைத்து நகைகள் கொள்ளை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர், பணகுடி அருகே பூட்டிய வீடுகளை உடைத்து கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.வீரவநல்லூர் அருகே காருகுறிச்சியைச் சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் 74. ஓய்வு பெற்ற தமிழாசிரியர். மனைவி 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். வீட்டில் தனியாக இருந்த ராமசுப்பிரமணியன் ஜன., 17ல் சென்னையிலுள்ள மகள் வீட்டுக்கு சென்றார். அதை பயன்படுத்தி வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்து 25 பவுன் நகைகள் மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.பணகுடி பாலாஜி நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் வரதராஜன் வீட்டிலும் அவர் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை