உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சர்வீஸ் அபார்ட்மென்ட் கட்ட வீட்டு வசதி வாரியம் திட்டம்

சர்வீஸ் அபார்ட்மென்ட் கட்ட வீட்டு வசதி வாரியம் திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில், வீட்டுவசதி வாரியம் சார்பில், 'சர்வீஸ் அபார்ட்மென்ட்' கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இது குறித்து, வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் கூறியதாவது: சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், வீடு போன்று அனைத்து வசதிகளுடன் இருக்கும் சர்வீஸ் அபார்ட்மென்ட்களை, மக்கள் ஆர்வத்துடன் பயன்படுத்துகின்றனர். சென்னை போன்ற நகரங்களில், இதற்கான சந்தை வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.தமிழகத்தில் விற்பனைக்கான வீடுகள், மாத வாடகை அடிப்படையிலான வீடுகளையே வீட்டுவசதி வாரியம் கட்டி வருகிறது. இந்த வீடுகள், குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இந்நிலையில், சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, குறுகிய கால வாடகைக்கு பயன்படுத்தும் வகையில், சர்வீஸ் அபார்ட்மென்ட் கட்டும் திட்டத்தை வீட்டுவசதி வாரியம் செயல்படுத்த உள்ளது.முதற்கட்டமாக, வேலுார் மாவட்டம் சாத்துவாச்சாரி பகுதியில், சர்வீஸ் அபார்மென்ட் கட்டும் திட்டம், 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கு நிதி ஒதுக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் இதை செயல்படுத்த திட்டமிட்டு இருக்கிறோம். குறிப்பாக, சென்னையில் விற்பனையாகாமல் உள்ள வீடுகளை, சர்வீஸ் அபார்ட்மென்ட்களாக மாற்றலாமா என்றும் ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Vivekanandan Mahalingam
ஜூன் 14, 2024 12:37

தேவையற்றது - தரமில்லாமல் கட்டி பணம் கொள்ளையடிக்க ட்ராவிடிய அரசு முயற்சி


Diraviam s
ஜூன் 14, 2024 11:43

EXCLUSIVE SERVICE APARTMENTS ARE BETTER. THEY SHOULD NOT COMBINE RESIDENTS & SERVICE APTS IN THE SAME BUILDING, WHICH IS A NUISANCE FOR THE RESIDENTS OR ALLOTTEES.


S. Gopalakrishnan
ஜூன் 14, 2024 06:21

காசுக்காக அவற்றை ஒரு மணி நேர வாடகைக்கு விடாமல் இருந்தால் சரி !


Kasimani Baskaran
ஜூன் 14, 2024 05:44

மாடல் அரசின் கட்டுமானங்கள் படு மோசமானவை என்பதை உலகம் அறியும். நாற்பதாண்டுகளுக்குள் வீழ்ந்த கட்டிடங்களை பொது மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்...


Rajinikanth
ஜூன் 14, 2024 12:18

DMK அரசு எதை செய்தாலும் அதை பற்றி ஒப்பாரி வைக்கவும், பிஜேபி எதை செய்தாலும் அதை தூக்கி பிடிக்கவும் இங்கு ஒரு வெட்டி கும்பல் அலைந்து கொண்டு தான் உள்ளது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை