உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எத்தனை ஆப்புகள்... அனைத்திற்கும் ஆப்பு தான்!

எத்தனை ஆப்புகள்... அனைத்திற்கும் ஆப்பு தான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேர்தலின் போது, அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணமோ, பரிசோ கொடுத்தால், மொபைல் போனில் படம் பிடித்து, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பும் வகையில், ஒரு 'ஆப்'பை வைத்திருக்கிறது தேர்தல் ஆணையம்.திருமங்கலம் பார்முலா முதல் திணறடிக்கும் பார்முலா வரை எத்தனை எத்தனை வகை கண்டோம்... ஏதாவது ஒன்றையாவது தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடிந்ததா? இல்லையே!இப்போது இந்த, 'ஆப்' எதற்கு? ஓட்டுக்கு துட்டு வாங்குபவர்கள், புகார் அளிக்கவா போகின்றனர்? சிலரோ, 'ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே...' ரகம்.பெரிய நகரங்களில், மெத்தப் படித்தவர்கள், படிதாண்டா உத்தமர்கள்; வாக்குச்சாவடி பக்கமே தலைவைத்து படுக்க மாட்டார்கள்.எல்லாவற்றிற்கும் மேலாக, ஆணையமும் ஒன்றும், சீசரின் மனைவி மாதிரி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது அல்ல!திராவிடக் கட்சிகள் இத்தனை ஆண்டுகளாக மக்களிடம் சுரண்டியதை, நாங்கள் ஓட்டுக்கு துட்டு வாயிலாக திரும்பக் கேட்கின்றனர் என சிலர் கூறுவதை, என்னென்று சொல்வது!ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு... 'சலுகையாய் தந்ததை உரிமையாய் அனுபவித்தல்' என்று... அதுபோல, ஆரம்பத்தில் இலவசங்களையும், பணத்தையும் அரசு தரும் சலுகையாய் நினைத்த குடிமக்கள், இன்று அதை உரிமையாய் பார்க்கத் துவங்கி விட்டனர். இனி எந்த கொம்பன் வந்தாலும், காசில்லை என்றால் ஓட்டு இல்லை!கடந்த தேர்தலில், ஒரு கிராமமே ஓட்டு போடாமல் இருந்தது; காரணம் கேட்டதற்கு, 'எப்படி போடுவோம்... இன்னும் பணம் வரவில்லையே...' என்றனர். ஆக சட்டபூர்வமாக்கப்பட்ட இந்த லஞ்சம், இன்று தேசிய மயமாக்கப்பட்டு விட்டது என்பது தான் கசப்பான உண்மை!இனி, எத்தனை, 'ஆப்'புகள் வந்தாலும், அத்தனைக்கும், 'ஆப்பு' தான் கிடைக்கும் இங்கே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

rama adhavan
ஜன 07, 2024 13:09

மக்களுக்கும் தேர்தலில் தம் பக்கம் ஓட்டளிக்க பணத்தை லஞ்சம் கொடுத்து அவர்களையும் திருட்டு காளவாணிகள் ஆக்கி விட்டனரே?


Gopalan
ஜன 07, 2024 11:34

இந்த ஓட்டப் பந்தயத்தில், பொதுப் பணத்தை மோசடி செய்து, ஓட்டுக்களுக்கு பணம் வழங்குவது, குடியரசு அரசாங்கங்களை தகர்க்க வழிவகுக்கும். மக்கள் புரிந்து கொள்ள வேண்டும், பணத்திற்காக வாக்களிக்கக்கூடாது. தேர்தலின் போது அரசியல் கட்சிகளிடம் பணம் வாங்க வேண்டும் ஆனால் அவர்களுக்கு வாக்களிக்க கூடாது. இயற்கையாகவே நம் நாட்டை வழிநடத்த பொது திருடர்கள் ஒழிக்கப்படுவார்கள்.


sridhar
ஜன 07, 2024 09:54

ஒவ்வொரு சொல்லும் உண்மை . ஈரோடு இடைத்தேர்தல் நம் மக்களுக்கு ஒரு கரும்புள்ளி .


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 07, 2024 09:43

தேர்தல் ஆணையத்துக்கு நிலைமை தெரியாதா என்ன ???? அதுவும் காமெடி பண்ணுது ........


Godyes
ஜன 07, 2024 09:02

இத நீ சொன்னா பத்தாது ஓய்.கடுமையான தடுப்பு முறைகளை சட்ட ரீதியில் கையாள்வது அவசியம்.


g.s,rajan
ஜன 07, 2024 08:37

Election Commission itself safeguard the Central and State Governments ,then how will it take stringnent action against it.....


VENKATASUBRAMANIAN
ஜன 07, 2024 08:26

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. இதுதான் உண்மை. மக்கள் புரிந்து கொண்டு திருந்த வேண்டும்


அப்புசாமி
ஜன 07, 2024 12:06

எதுக்கு திருந்தணும்?. இதுவே நல்லாருக்கு.


S Ramkumar
ஜன 12, 2024 09:02

அம்மா காசு கொடுக்கும் திருடனுக்கு நல்லா தான் இருக்கும். காசுக்கு ஒட்டு போடும் மக்களாலும் திருடர்கள்.


செல்வக்கடுங்கோவாழியாதன்,அரண்மனைபுதூர்
ஜன 07, 2024 07:20

தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதாசாஹுவை முதலில் தமிழகத்தில் இருந்து தூக்கி விட்டு நேர்மையான அதிகாரியை நியமித்தாலே ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அரசியல்வாதிகள் பாதி பேருக்கு பயம் வந்து விடும். ஈரோட்டில் நடந்த இடைத்தேர்தல்களில் இந்த சத்தியபிரதாசாஹூ எப்படி திமுக மாவட்ட செயலாளர் போல் தேர்தல் பணியை செய்தார் என்று தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும் எனவே தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை உடனே மாற்ற வேண்டும் என்பதை விட உடனே தூக்க வேண்டும் என்பதுதான் சரியான வார்த்தையாக இருக்கும்.


K.Muthuraj
ஜன 07, 2024 09:41

அரசு அதிகாரிகள் எல்லாம் அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் கை பொம்மையே. ஆட்சியாளர்களை சரியாக மக்கள் செலக்ட் செய்யாதவரை இந்த அவலங்கள் மக்களுக்கு தொடரும்.


Kasimani Baskaran
ஜன 07, 2024 07:15

அங்கலாய்ப்பதில் பயனில்லை. ஊழல் செய்வோருக்கும் ஜனநாயகத்தை விலைக்கு வாங்க முயல்வோருக்கும் ஒரு பொழுதும் ஓட்டு கிடையாது


Duruvesan
ஜன 07, 2024 07:05

பாஸ், ஹிந்துனா வேசி மகன்னு சொன்னாலும் காசு குடுத்தா அவனுக்கு தான் அடிமைகள் ஓட்டு போடும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை