உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எத்தனை உயிர்கள் பலியாவதை தி.மு.க., அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது?: அன்புமணி கேள்வி

எத்தனை உயிர்கள் பலியாவதை தி.மு.க., அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது?: அன்புமணி கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆன்லைன் ரம்மியால், இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை தி.மு.க., அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது? என பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேலம் மாவட்டம் சின்னமணலியைச் சேர்ந்த அங்கமுத்து என்ற விசைத்தறி உரிமையாளர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடனாளி ஆனதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

வேடிக்கை

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே தீர்வு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான் என்று தமிழக அரசை வலியுறுத்தி வருகிறேன். ஆனால், அதன்பின் 8 மாதங்களுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவதற்கு எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. இதை வைத்துப் பார்க்கும் போது, ஆன்லைன் சூதாட்டத்திற்கு இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது? என்ற கவலையும், அச்சமும் ஏற்படுகிறது.

விசாரணை

இந்த விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல், உச்சநீதிமன்றம் கோடை விடுமுறைக்குப் பிறகு நாளை திறக்கப்படவுள்ள நிலையில், தலைமை நீதிபதியை அணுகி ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், சரியான காரணங்களை முன்வைத்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

திருப்பூர் தினேஷ்
ஜூலை 08, 2024 12:49

ரெண்டு ரவுடி பார்ட்டிங்களும் ஒருத்தரை ஒருத்தர் சாவடிச்சு, ரவுடிகள் எண்னிக்கை குறைஞ்சு தமிழகம் நல்லாயிட்டு வருது.


D.Ambujavalli
ஜூலை 07, 2024 16:38

அன்றொரு நாள் ஒரு அனிதாவும், ராஜேந்திரனும் neet காக மரணித்தால் கொதித்து ezhu அவர்கள் Online ஒன்லைன் ரம்மியால் வரவு இருக்கும்போது மூச்சுப் பேச்சே இருக்காதே


அப்புசாமி
ஜூலை 07, 2024 16:33

இவிங்க யாரும் ஏன். குறை கூறுவதில்லை?


Barakat Ali
ஜூலை 07, 2024 14:31

திருமாவளவன் ஆம்ஸ்ட்ராங் கிற்கு மெரினா பீச்சில் இடம் கேட்கவேண்டும் ........


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 07, 2024 14:03

ஆட்சியில் இருப்பதை சம்பாதிக்கும் வாய்ப்பாகப் பார்க்கும் கட்சியிடம் சட்டம் ஒழுங்கை ஏன் காப்பாற்றவில்லை என்று கேட்கிறாரே ????


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை