உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்னும் எத்தனை உயிர்களைப் பறித்தால் திமுக அரசின் தாகம் தீரும்? நயினார் நாகேந்திரன் காட்டம்

இன்னும் எத்தனை உயிர்களைப் பறித்தால் திமுக அரசின் தாகம் தீரும்? நயினார் நாகேந்திரன் காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்கள் பலியாவது தொடர்கதையாகி வரும் வேளையில், இன்னும் எத்தனை உயிர்களைப் பறித்தால் திராவிட மாடல் அரசின் தாகம் தீரும்? என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை: சென்னை கொளத்தூரில் கால்வாய் அடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது விஷவாயு தாக்கி தூய்மைப் பணியாளர் ஒருவர் பலியாகி இருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அவரை மீட்க முனைந்த இரு தூய்மைப் பணியாளர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=exmeuk4f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்கள் பலியாவது தொடர்கதையாகி வரும் வேளையில், இன்னும் எத்தனை உயிர்களைப் பறித்தால் திராவிட மாடல் அரசின் தாகம் தீரும்? போலி விடியல் ஆட்சியின் விழிகளுக்கு எப்போது தான் துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்வு புலனாகும்?கார் ரேஸ்ஸூக்கும் விளம்பர நாடகங்களுக்கும் கோடி கோடியாக செலவழிக்கும் திமுக அரசுக்கு ஏழைத் துப்புரவுத் தொழிலாளியின் பாதுகாப்பை மேம்படுத்த சில ஆயிரம் ரூபாயில் பாதுகாப்புக் கவசம் வாங்க முடியாதா? தூய்மைப் பணியாளர்களின் வாழ்வைத் துச்சமெனத் தூக்கியெறிந்து சாகடித்துவிட்டு மேடைகளில் மட்டும் சமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் திமுக ஆட்சி தமிழக மக்களால் தூக்கியெறியப்படும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

bharathi
அக் 05, 2025 06:24

in village there is a say..every day morning he appear in press meet and blaber..annamalaiji we miss you. Just remain as dravidian stock


Vijay D Ratnam
அக் 05, 2025 00:27

நயினார் நாகேந்திரன் அவர்களே, திமுகவை குறைத்து மதிப்பிடாதீர்கள்.அதிமுக போல திமுகவுக்கு பெர்மனண்ட் வாக்கு வங்கி 25 சதவிகிதம் அளவுக்கு குறையாமல் இருக்கிறது. அது எப்போதும் மாறாது. அதுமட்டுமல்ல திமுகவின் நிரந்தர அல்லக்கைகளான காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், பெரியாரிஸ்ட், நக்ஸ்லைட், அர்பன் நக்சல்ஸ், இவாஞ்சலிஸ்ட், இஸ்லாமிஸ்ட் ஆதரவாளர்கள், மதமாற்ற மாபியா கும்பல்ஸ், கூலிக்கு கூவும் மீடியாக்கள், எலும்புத்துண்டுக்கு வாலாட்டும் யுட்யூபர்ஸ் ஆதரவு அமோகமா இருக்குது. தவிர தேர்தல் நேரத்தில் அள்ளி வீச பணத்திற்கு பஞ்சமே இல்லை. ஓட்டுக்கு ஆயிரம் ரூவா, வேட்டி, புடவை, குடம், குக்கர், கொலுசு, குந்தாணி, திருகாணி சப்ளை சிறப்பாக நடக்கும். மத்தபடி அங்கங்கே கறிசோறு, பிரியாணி, குவாட்டர் பஞ்சமில்லாமல் அள்ளிவிடுவார்கள். இஸ்லாமிய கிருஸ்தவ வாக்குகள் பள்ளிவாசல்களில் பாதிரியார்களின் உத்தரவுப்படி சிந்தாமல் சிதறாமல் திமுக கூட்டணிக்கு வந்து சேர்ந்துவிடும். சோ, சுலபமில்லை நைனா. ஆட்சியை பிடிக்கணும்னு நெனச்சா அப்பனை அல்லது மவனை ஊழல், சொத்துகுவிப்பு என கொள்ளையடித்த விவகாரத்தில் தூக்கி உள்ளே போடுங்கள். அட்லீஸ்ட் மறுமவனையாவது தூக்கி உள்ளே போடுங்கள். அதை நீங்க செய்யாதவரை விஜய் சொன்னது போல மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்ட பாஜக திமுக கள்ளக்கூட்டணி விவகாரம் மறையப்போவது இல்லை.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 05, 2025 00:23

நாலு கோடி வழக்கு தூங்குதே? சிபிஐ தாலாட்டில் தானா?


vivek
அக் 05, 2025 05:53

ஹி.. ஹி ...


amjith
அக் 04, 2025 22:33

அது எண்ணில் அடங்காதவை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை