மேலும் செய்திகள்
இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் அரட்டையில் இணையுங்கள் வாசகர்களே!
3 hour(s) ago | 5
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
6 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
7 hour(s) ago | 21
சென்னை:தமிழகத்தில், 38 மாவட்டங்களில், 644 நீர் நிலைகளில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு நடத்த, வனத்துறை திட்டமிட்டுள்ளது.நீர் நிலைகள், நிலப் பகுதிகள் என, இரண்டு வகையாக கணக்கெடுப்பு நடத்துவது வழக்கம். கடந்த ஆண்டு, 38 மாவட்டங்களில், 600க்கும் மேற்பட்ட இடங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 410 வகைகளை சேர்ந்த, 4.66 லட்சம் பறவைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நடப்பு ஆண்டுக்கான கணக்கெடுப்பு நடவடிக்கைகளை, வனத் துறை துவக்கி உள்ளது. இதுகுறித்து, வனத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்த ஆண்டு கணக்கெடுப்பு, இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. வரும், 27, 28ம் தேதிகளில் நீர் நிலைகளில், பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படும்.அடுத்த கட்டமாக, மார்ச் 2, 3ம் தேதிகளில் நிலம் சார்ந்த வனப் பகுதிகளில், பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். இதற்காக, 41 வனக் கோட்டங்களில் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பறவை ஆர்வலர்கள் பங்கேற்கலாம். இந்த ஆண்டு, 38 மாவட்டங்களிங், 644 நீர் நிலைகளில் முதல் கட்ட பறவைகள் கணகெடுப்பு நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
3 hour(s) ago | 5
6 hour(s) ago | 5
7 hour(s) ago | 21