உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜீவனாம்ச வழக்கில் ரூ. 80,000 க்கு சில்லறையாக கொடுத்த கணவன்!

ஜீவனாம்ச வழக்கில் ரூ. 80,000 க்கு சில்லறையாக கொடுத்த கணவன்!

கோவை:ஜீவனாம்ச வழக்கில், 80,000 ரூபாய்க்கு கோர்ட்டில் சில்லறை காசுகளாக கொடுத்த கணவரால் பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்றம் வாங்க மறுத்ததால் இன்று நோட்டுகளாக ஒப்படைத்தார். கோவை, வடவள்ளி பகுதியை சேர்ந்த தம்பதி, குடும்ப பிரச்னை காரணமாக விவாகரத்து கோரி, கோவை கூடுதல் குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், கணவன் தரப்பிலிருந்து இடைக்கால ஜீவனாசம் வழங்க கோரி அதே நீதிமன்றதில் மனைவி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இரண்டு லட்சம் ரூபாய் இடைக்கால ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டு இருந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=l8on9xja&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முதற்கட்டமாக, 80,000 ரூபாய் கோர்ட்டில் செலுத்த கணவர் வந்தார். அப்போது, ரூபாய் நோட்டு கட்டிற்கு பதிலாக, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை, 80,000 ரூபாய்க்கு சேகரித்து, அவற்றை, 20 சாக்குபையில் போட்டு நேற்று கோர்ட்டில் ஒப்படைத்தார். கோர்ட்டிற்கு சாக்கு பையுடன் வந்த நபரை கண்டு, வக்கீல்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர். இதை பார்த்த நீதிபதி கஜரா ஆர். ஜிஜி , சில்லறை காசுக்கு பதிலாக, ரூபாய் நோட்டுகளாக ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து சில்லறை காசுகளை திரும்பவும் எடுத்து சென்ற அந்த நபர், இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜராகி, 500 ரூபாய் நோட்டுகளாக சேர்த்து, 80,000 ரூபாயை ஒப்படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

சாண்டில்யன்
டிச 19, 2024 21:07

இதுபோன்ற குறும்பன்களை விவரம் விசாரித்து அறியாமலே திருமணம் செய்தது தவறு.ஒவ்வொரு வினாடியும் நரகம்தான்.போகட்டும்,இப்போது விவாகரத்து செய்தது அதனினும் நன்று.இவன் மறுமணம் செய்யும் எண்ணம் ஈடேறுமா


Ramesh Sargam
டிச 19, 2024 19:18

சில்லறை காசுகளை கூட இந்திய அரசுதானே தயாரிக்கிறது. நீதிமன்றம் அவற்றை ஏன் நிராகரிக்க வேண்டும்?


அப்பாவி
டிச 19, 2024 19:11

எப்புடிக் கொடுத்தாலும் வாங்கிக்கணும்.இப்பவும் அமெரிக்காவுல ஒரு பைசா குடுத்தாலும் வாங்கிக்கறாங்களாம். இங்கே அஞ்சு பைசா, 10 பைசா, 25 பைசா , 50 பைசா எல்லாத்தையும் செல்லாதுன்னு சொல்லி ஒழிச்சி கட்டிட்டாங்க. இப்போ ஒரு குறிப்பிட்ட அஞ்சு ரூவா நாணயத்த அமுக்கறாங்களாம்.


சாண்டில்யன்
டிச 19, 2024 21:01

What is legal tender? - Reserve Bank of India. COIN OF ANY DENOMINATION NOT LOWER THAN ONE RUPEE SHALL BE LEGAL TENDER FOR ANY SUM NOT EXCEEDING ONE THOUSAND RUPEES THAT IS RULE UNDER LEGAL TENDER .


Matt P
டிச 19, 2024 22:45

இங்கு எல்லாம் வங்கி பரிவர்த்தனை தான். இந்த மாதிரி பணத்தை எண்ண வேண்டிய தேவை எல்லாம் இல்லை. ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேலே வீட்டில் பணத்தை வைத்திருப்பதே தவறு.Money laundering என்று ஆகி விடும். பணம் காரில் கடத்தப்படுகிறது என்று தெரிந்தால் எப்போதும் பிடிப்பார்கள். தேர்தல் காலங்களில் மட்டுமல்ல.


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 19, 2024 17:00

சில்லறை இல்லாமையால்தான் பால் அளவைக் குறைத்து விலையை ஏற்றி இருக்கிறோம் என்று அமைச்சர் சொல்லி இருக்கிறார். இந்த அன்பர் இந்த எண்பதாயிரம் ருபாய் சில்லறைகளை ஆவின் நிறுவனத்துக்கு கொடுத்தால் பால் விலையை குறைத்து அளவை கூட்ட முடியுமே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை