| ADDED : ஜன 15, 2024 02:24 AM
ஆரணி: காஞ்சிபுரம் மாவட்டம், பெரிய காஞ்சிபுரத்தை சேர்ந்த இஸ்மாயின் ஷரீப் மகன் நாசர் ஷரீப், 35. இவர், திருவண்ணாமலை மாவட்டம், அப்பந்தாங்கலை சேர்ந்த மஸ்தான் ஷரீப் மகள் ஆயிஷா பிர்தோஸ், 33, என்பவரை, 2018ல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். திருமணம் நடந்த சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆயிஷா கடந்தாண்டு கணவரை பிரிந்து, ஜெர்மன் நாட்டுக்கு பணிக்கு சென்றார். பெங்களூருவில் நாசர் ஷரீப் பணிபுரிந்தார்.சில நாட்களுக்கு முன், இஸ்லாமிய முறைப்படி திருமண முறிவான, 'முத்தலாக்' செய்வதாக தெரிவித்து, ஆயிஷாவுக்கு பதிவு தபால் அனுப்பினார். அதை பெற்ற அந்த பெண் அதிர்ச்சியடைந்தார். ஊர் திரும்பிய ஆயிஷா, ஆரணி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.விசாரித்த போலீசார், முறைப்படி விவாகரத்து பெறாமல், இரண்டாவது திருமணத்துக்கு ஏற்பாடு செய்வது தெரிந்து, தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.