உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சொன்னதை செய்கிறவன் நான்; இதுவே சாட்சி என சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

சொன்னதை செய்கிறவன் நான்; இதுவே சாட்சி என சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சொன்னதை செய்கிறவன் நான் என்பதற்கு இந்த மாவீரன் பொல்லான் சிலையே சாட்சி என ஈரோட்டில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் தெரிவித்தார்.ஈரோட்டில் மாவீரன் பொல்லான் சிலையை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மாவீரன் பொல்லானின் சிலையை திறந்து வைத்ததில் நான் மிகுந்த பெருமை அடைகிறேன். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் வீரமடைகிறேன். எழுச்சி அடைகிறேன். மாவீரன் பொல்லானுக்கு சிலையுடன் மணி மண்டபம் அமைப்போம் என்று சொன்னேன் இன்று திறந்து வைத்துள்ளேன். சொன்னதை செய்கிறவன் நான் என்பதற்கு இந்த மாவீரன் பொல்லான் சிலையே சாட்சி.தீரன் சின்ன மலையின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாக இருந்தவர் மாவீரன் பொல்லான். அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீடு சட்டத்தால் மருத்துவம், பொறியியல், சட்டம், கலைக்கல்லூரிகள் என அருந்ததியின மாணவர்கள் அதிக இடங்கள் பெற்று வாழ்வில் முன்னேற்றம் கண்டு வருகிறார்கள். லட்சகணக்கான அருந்ததியின மக்களின் வாழ்க்கையில் திமுக அரசு ஒளியேற்றி இருக்கிறது. ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கான கட்டமைப்பில் என்னுடைய பங்கு இருந்ததை எண்ணி பெருமை அடைகிறேன். அருந்ததியினர் மக்களுக்கு திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கரூரில் அருந்ததியின மாணவர்களுக்கு 26 விடுதிகள் கட்டப்பட்டு உள்ளன. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் உண்மையான வளர்ச்சி. எல்லாருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் அரசின் லட்சியத்தை நிறைவேற்றுவோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி