உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதற்குமேல் அழுவதற்கு கண்ணீரே இல்லை ; சி.பி.ஐ., யிடம் எல்லாமே சொல்லி விட்டேன்  6 மணி நேர விசாரணைக்கு பின் பேராசிரியை நிகிதா பேட்டி

இதற்குமேல் அழுவதற்கு கண்ணீரே இல்லை ; சி.பி.ஐ., யிடம் எல்லாமே சொல்லி விட்டேன்  6 மணி நேர விசாரணைக்கு பின் பேராசிரியை நிகிதா பேட்டி

மதுரை: அஜித்குமார் கொலை வழக்கில் மடப்புரம் கோயிலில் காரில் வைத்த நகை காணாமல் போனதாக புகாரளித்த மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிகிதா மற்றும் அவரது தாயாரிடமும் டி.எஸ்.பி., மோஹித்குமார் தலைமையிலான குழுவினர் 6 மணி நேர விசாரணை நடத்தினர். இரண்டாவது முறையாக சி.பி.ஐ., அதிகாரிகள் சம்மன் அனுப்பிய நிலையில், நிகிதா, அவரது தாயார் சிவகாமி இருவரும் மதுரை ஆத்திகுளம் சி.பி.ஐ., அலுவலகத்தில் ஆஜராகினர். 6 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணையில், ஜூன் 27 ஆம் தேதியன்று நிகிதா அவரது தாயாருடன் எங்கெங்கு சென்றார், https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ycq5sz13&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மருத்துவமனைக்கு சென்றார்களா. நகையை எந்த இடத்தில் வைத்து கழற்றினார்கள், எந்தெந்த வகையிலான நகைகள், ரசீது, நகை காருக்குள் வைக்கப்பட்ட இடம், அஜித்குமாரிடம் பேசியது குறித்தும், காலையில் கோயிலில் நடந்தது முதல் மாலையில் திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷன் அஜித்குமாரை அழைத்து சென்ற வரையிலான சம்பவங்கள் குறித்தும் விசாரணை நடத்தினர். நிகிதாவிற்கு வந்த செல்போன் அழைப்புகள் குறித்தும் கேள்விகளை எழுப்பினர்.

விசாரணை முடிந்து புறப்பட்ட நிகிதா நிருபர்களிடம் கூறியதாவது:

என்னைப் பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். நடந்த உண்மைகளை சி.பி.ஐ., அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். மீண்டும் விசாரணைக்கு அழைத்தாலும் வருவேன். புகார் மட்டுமே கொடுத்தேன். அதன்பிறகு என்ன நடந்தது என்னவென்று தெரியாது. அஜித்குமார் இறந்ததற்கு வருத்தப்படுகிறேன். இதற்குமேல் அழுவதற்கு கண்ணீரே இல்லை; வேதனையாக உள்ளது. சரிவர சாப்பிட முடிவதில்லை. காய்கறி, பெட்ரோல் போட போக முடியவில்லை. கல்லூரி செல்லவில்லை. மக்கள் ஒருபுறம் மட்டுமே பேசுவது வருத்தமாக உள்ளது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Raghavan
ஜூலை 30, 2025 21:49

யார் அந்த சார் உயர் பதவியில் கோட்டையில் இருப்பவர். அவருக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம் ஓர் உறவு. அவர் எதுக்கு போலீஸ் அதிகாரிகளுக்கு போன் செய்தார். இவள் மேல் உள்ள பழைய வழக்குகளை தூசிதட்டி இப்போதாவது விசாரிப்பார்களா இல்லையா. 2011 ல் போடப்பட்ட வழக்குகள் இவளவு நாட்களாக தூசிதட்டாமல் தூங்கிகொண்டுஇருக்கிறது.கல்லூரியிலேயே ரௌடியிசத்தை காட்டியவர் பொதுஇடங்களில் எப்படியிருப்பர் என்று சொல்ல தேவையில்லை.


samvijayv
ஜூலை 30, 2025 13:00

இதற்கு மேலும் அழுதாலும்... ஓர் உயிர் போனது போனது தானே, அதிகாரம் என்பது இருந்தால் யார் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அதுதான் இந்தியா.


MP.K
ஜூலை 30, 2025 10:53

விசாரணை நேர்மையாக இருக்க வேண்டும் ஏன் என்றால் இவர் பல மத்திய அரசு அதிகாரிகளிடம் நட்பில் உள்ளார். உண்மை வெளிவர வேண்டும். அடித்தே கொன்ற அந்த காவல்துறையில் உள்ள அனைவரையயும் பணிநீக்கம் செய்ய வழிவகை செய்ய வேண்டும். அப்போது தான் இது போன்ற கொலைகள் நடக்காது.


N.Purushothaman
ஜூலை 30, 2025 07:02

இவ்வளவு விசாரணைக்கு பிறகும் திருடப்பட்டதாக கூறப்படும் நகைகள் மீட்கப்படவேயில்லை ...அப்படியெனில் நகை திருட்டு என்பதே ஒரு கட்டுக்கதை என்று தானே முடிவுக்கு வர முடியும் ?


நிக்கோல்தாம்சன்
ஜூலை 30, 2025 04:24

பணியிலும் நீங்க இவ்ளோ நாள் செய்து வந்த அடக்குமுறை ஓய்வுக்கு வருமா நிகிதா?


Mani . V
ஜூலை 30, 2025 04:03

ஏன் கண்ணீர் ஸ்டாக் இல்லையா? ஆன்லைனில் ஒரு ஐந்து லிட்டர் கண்ணீர் ஆர்டர் பண்ணலாமே? உன்னைச் சொல்லி குற்றமில்லை. ஒரு கொலைக்கு மூலகாரணம் ஆன உன்னை இன்று வரை கைது செய்யாமல் இருக்கும் அர்சை, காவல்துறையைச் சொல்லணும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை