உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பத்து நிமிடம் பேசுவதையே சனிக்கிழமை வரைக்கும் மனப்பாடம் பண்ணணும்; விஜய் மீது சீமான் பாய்ச்சல்

பத்து நிமிடம் பேசுவதையே சனிக்கிழமை வரைக்கும் மனப்பாடம் பண்ணணும்; விஜய் மீது சீமான் பாய்ச்சல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''10 நிமிஷம் தான் பேச அனுமதி கேக்குறாங்க, இதையே சனிக்கிழமை வரைக்கும் மனப்பாடம் பண்ணணும், நடிச்சு பாத்துட்டு வந்து பேசணும்'' என விஜயை கடுமையாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக சாடினார்.ராமநாதபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் சீமான் பேசியதாவது: கொள்கை தலைவர் என்று நீ அறிவித்துள்ளவர்களின் கொள்கை பற்றி பேச வேண்டாமா? காமராஜர் கொள்கை தலைவர் என்றால் யார் காமராஜர் என்று 10 நிமிடம் பேசு. வேலு நாச்சியார் யார் என்று 10 நிமிடம் பேசு.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hyurymxf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நீ மொத்தமாக பேச அனுமதி கேட்குறது 10 நிமிடம் தான். திருச்சியில் பேசுறதுக்கு 10 நிமிடம் தான் கேட்டு இருக்காங்க. அரசு பேசுறதுக்கு கூட 5 நிமிடம் கொடுத்து இருக்கிறது. இதுக்கு சனிக்கிழமை வரை மனப்பாடம் பண்ண வேண்டும். நடித்து பார்த்து வந்து பேச வேண்டும். பிக்பாஸ் மாதிரி ஜனங்கள் விஜய் வருகிறார் என்கிறார்கள். வேட்டைக்கு தான் வெளியே வருவாராம். நீ வேடிக்கை காட்ட வருகிறாய். ஒரு அடிப்படை தெரிகிறதா? நீ வேடிக்கை காட்ட வருகிற சிங்கமாக இருக்கிறாய். கோட்பாடு அளவில் தான் எதிர்க்கிறேன். உறவு அளவில் அண்ணன், தம்பி இல்லை என்கிறாமா, சண்டை போடுகிறாமா?பெரிய எதிரி உடன் மல்லுக்கட்டி முன்னேறி போகிறேன். எளிய மகன் முன்னேறி வரும் போது அண்ணன் கமலஹாசனை குறுக்கே விட்டார்கள்.அதனை அடித்து முன்னேறி போகும் போது இவர் வருகிறார். எவனாவது அவர் பேசுவதை உட்கார்ந்து கேட்டு பார்த்து இருக்கிறீர்களா, தியேட்டரில் முதல் காட்சி கத்துகிற மாதிரி தான். உனக்கு நண்பா, நண்பி. எனக்கு தம்பி, தங்கை. அவன் எதிர்காலத்திற்கு தான் நான் போராடி கொண்டு இருக்கேன். நான் இங்க சண்டை போட்டு இருக்கும் போது தான் எதிர்க்க வேண்டிய நிலை வருகிறது.பாஜ உன் கொள்கை எதிரி. முதலில் உன் கொள்கையை சொல்லு, நான் எதிரா, இல்லையா என்று பார்க்கிறேன். முதலில் உன் கொள்கை எதிரியை சொல்லுப்பா. எந்த எந்த அரசியலில் முரண்படுகிறாய்? பாஜவுக்கும், காங்கிரசுக்கும் என்ன கொள்கை வேறுபாடு என்று சொல்லு. பாஜ, காங்கிரஸ், அதிமுக, திமுக கொடியில் வண்ணம் மாறும். எண்ணம் மாறாது. பார்ட்டி (கட்சி) மாறும். பாலிசி (கொள்கை) மாறாது. திமுகவுக்கு மாற்று திமுக எப்படி இருக்க முடியும்? நெருப்பை எப்படி நெருப்பால் அணைக்க முடியும்?அங்கு ஒரு தண்ணீர் தேவைப்படுகிறது. ஊழல், லஞ்சத்திற்கு எதிராக உண்மையும், நேர்மையும் இருக்க முடியும். முதல்வராக ஆவது லட்சியம் இல்லை. முதல்வர் ஆகி என்ன செய்ய போகிறேன் என்பது தான் இலக்கு, லட்சியம். ஏழை, பணக்காரன் என்று வேறுபாடு இல்லாமல் தரமான கல்வி வழங்கப்படும். உலக தரத்தில் கல்வி, மருத்துவம் கொடுப்பேன். இது என் கனவு. படித்தவன், படிக்காதவன் எல்லோருக்கும் அரசு வேலை கொடுப்பேன். படிக்காதவன் இல்லை என்ற நிலையை உருவாக்குவேன். இவ்வாறு சீமான் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

தியாகு
செப் 12, 2025 14:14

இலங்கை போன்று இயற்கை விவசாயம் தான் செய்ய வேண்டும், வரிகளை குறைக்க வேண்டும், இலவசங்களை அள்ளி கொடுக்க வேண்டும், அனைவருக்கும் அரசு வேலை கொடுக்க வேண்டும், அனைத்து நிறுவனங்களையும் அரசே நடத்தவேண்டும், அரசே விவசாயம் செய்ய வேண்டும், மானியங்கள் நிறைய கொடுக்க வேண்டும் என்று கூவும் நாம் டுமிழர் கட்சியின் சிறப்பு என்னான்னா, 18 வயதில் ஒரு இளைஞன் செபாஸ்டியன் சைமனின் உணர்ச்சி பொங்கும் பேச்சை கேட்டுவிட்டு ரத்தம் கொதிக்க நாம் டுமிழரில் சேருவான். அந்த இளைஞனுக்கு 23 வயது ஆகும்போது உலக அரசியல், உலக பொருளாதாரம் இவற்றை படித்து தெரிந்துகொண்டு இந்தாளு பின்னாடியா ஐந்து வருடங்கள் இருந்தோம்னு தனக்கு தானே தலையில் அடித்துக்கொண்டு நாம் டுமிழரை விட்டு ஓடி விடுவான். அவ்வாறு ஓடி வரும் இளைஞன் 23 வயதில் இருந்து 25 வயது வரை சினிமா மோகத்தில் நம்மை காக்க வந்த ஒரே கட்சி ஆண்டவரின்? பகுத்தறிவு பகலவனின் ? நம்மவரின் ? மக்கள் நீதி மய்யம் என்று முடிவெடுத்து அதில் சேருவான். 25 வயதில்தான் அவனுக்கு தெரியவரும் நம்மவர் கமல் ஒரு டுபாக்கூர் என்றும் அரசியல் ஜோக்கர் என்றும் மற்றும் அந்த கட்சி கோமாளிகளின் கூடாரம் என்றும். 25 வயதில் தனது தாத்தா, அப்பா எவ்வாறு திருட்டு திமுக போன்ற ஊழல் திராவிட கட்சிகளால் ஏமாற்றப்பட்டார்கள் என்பதை சிந்தித்தும், குருமாவின் சிறுத்தை குட்டீஸ் போன்ற ஜாதி கட்சிகளால் தமிழகம் எவ்வளவு கீழ்த்தரமாக இருக்கிறது என்பதை சிந்தித்தும், தேசிய சிந்தனையுடன், ஊழல், லஞ்சம் அற்ற அரசு அமைய தன்னிச்சையாக சிந்திக்கும் திறன் பெற்று எந்த கட்சியில் சேருவான் என்று நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள். 


கத்தரிக்காய் வியாபாரி
செப் 12, 2025 13:59

அப்போ எந்த தூண்டு சீட்டு எந்த கேள்வியோட பதில்னு மனப்பாடம் பண்ணுற ஆசாமியை என்ன பண்ணுறது?


தியாகு
செப் 12, 2025 14:16

கத்திரிக்காய் வியாபாரியே, உங்கள் கத்திரிக்காய்களை பத்திரமாக பாதுகாத்து வைத்துக்கொள்ளவும், இல்லனா கட்டுமர திருட்டு திமுகவினர் யாருக்கும் தெரியாமல் ஆட்டையை போட்டு கத்திரிக்காய் புளி குழம்பு செய்து சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிடுவார்கள்.


V Venkatachalam
செப் 12, 2025 13:27

இப்போ போட்டிருக்கும் தடைகளோடு சேர்த்து சனிக்கிழமை பேச கூடாதுன்னு அட்டிஷனலாக ஒரு தடை போட்டாச்சுன்னா, மறுபடியும் அடுத்த சனிக்கிழமை வரை மனப்பாடம் பண்ணனும். சரியா?


Madras Madra
செப் 12, 2025 13:08

வெள்ளிக்கிழமை ராமசாமி மாதிரி இவர் சனிக்கிழமை ஜோசப் சாமி எல்லாம் படம் நமக்கு பாடம்


mohana sundaram
செப் 12, 2025 12:30

சைமன் என்ற சீமான் ஆகிய நான் எப்பொழுது சுடாலினை சந்தித்தேனோ அன்றே நான் கொத்தடிமையாகி விட்டேன். எனவே இனி நாம் மற்ற கட்சிகளை பற்றி தான் பேசுவேன். அதில் முக்கியமாக ஜோசப் விஜய் கட்சி.


Anand
செப் 12, 2025 11:16

அதுவும் சில டேக்குகள் எடுத்து எடிட் செய்து பார்த்த பிறகு பொதுவெளியில் ஒப்புவிப்பான். ஆமா இந்த சோசப்பு ஏன் எப்பப்பாத்தாலும் மேடையில் மூஞ்சியை டபுள்யூ போல வைத்துக்கொள்கிறான். மூஞ்சியை விறைப்பா வச்சுக்கோ என டைரக்டர் எவனாவது அறிவுரை வழங்கியிருப்பானோ?


Barakat Ali
செப் 12, 2025 12:55

அட.. ஆமால்ல... அம்பது வயசுக்கு மேல மூஞ்சியைத்தான் விறைப்பா வெச்சுக்க முடியும் ....


Raja k
செப் 12, 2025 11:15

அய்யா சீமான் அவர்களே, இந்த சங்கிகள் தொல்லை தாங்க முடியல, அவர்களை பத்தியும் பேசவும்


Raman
செப் 12, 2025 13:21

Enna OP, 200 vangiacha?


M Ramachandran
செப் 12, 2025 11:13

அவர் உங்க மாதிரி சினிமாவில் டைரக்டராயிருந்ததில்லை. சினிமா நடிகர்களும் சிவாஜி கணேசன் மாதிரி இல்லை. பள்ளியில் செய்தற்களோ இல்லையையோ நேற்று போட்டு காசு சம்பாதிக்க வேண்டி இருக்கு.


Artist
செப் 12, 2025 11:09

பெட்டி கனமா தராவிட்டால் இப்படி தான் குறை குடம் கூத்தாடும் ...


Barakat Ali
செப் 12, 2025 10:53

அதாவது [நானும் டீம்காவின் டீமுதான்.... எனக்கு இருக்குற திறமை கூட உனக்கில்லையே] என்கிறார் சீமு ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை