உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முல்லை பெரியாறுக்காக மீண்டும் போராடுவேன்

முல்லை பெரியாறுக்காக மீண்டும் போராடுவேன்

கரூர் துயர சம்பவத்தில் 41 பேர் பலியானது, த.வெ.க., தலைவர் விஜய்க்கு அனுபவம் இல்லை என்பதை காட்டுகிறது. தமிழகத்தில் பா.ஜ., கால் ஊன்ற, மக்கள் இடம் தர மாட்டர். இந்தியாவுக்கே வழிகாட்டும் இடத்தில் தி.மு.க., உள்ளது. கூட்டணியில் சீட் ஒதுக்கீடு பற்றி நாங்கள் பேசியது கிடையாது. ம.தி.மு.க., அங்கீகாரத்தை தக்கவைப்பதற்கு, சில விதிமுறைகளை தேர்தல் கமிஷன் வகுத்துள்ளது. அதை பின்பற்றி போட்டியிடுவோம். முல்லை பெரியாறு அணைக்காக போராட்டம் நடத்தி, வெற்றி கண்டதாக நினைக்கும்போது, கேரளா அமைப்பு தொடர்ந்த வழக்கில், 'முல்லை பெரியாறு அணை தொடர்பான கோரிக்கையை மீண்டும் பரிசீலிக்கலாம்' என்ற தீர்ப்பு பேரிடியாக உள்ளது. இதற்கு முன் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் மற்றும் வழி காட்டுதல்களை தாண்டி இந்த விஷயம் போகாது என நம்புகிறேன். ஒருவேளை, அப்படிச் சென்றால், நிச்சயம் சட்டரீதியாக போராடுவேன். - வைகோ பொதுச்செயலர், ம.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Nanchilguru
அக் 25, 2025 18:29

இவரை தமிழ்நாடு மக்கள் மறந்து ரொம்ப நாள் ஆகுது.


panneer selvam
அக் 25, 2025 17:58

MDMK is nothing but spent force , no role in Tamilnadu


xxxx
அக் 25, 2025 15:01

பிஜேபி மட்டுமே இலக்கு ... கொள்ளையர்கள் கண்ணுக்கு தெரிவதில்லை .... கண்ண சோதிக்கனும்


duruvasar
அக் 25, 2025 14:37

மழையில் வெளியே வந்த ஈசல்


sundarsvpr
அக் 25, 2025 09:02

அரசு பணியாளர்களுக்கு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு பணி ஓய்வு வயது உண்டு. ஆனால் அரசியல்வாதி மற்றும் அமைச்சர்களுக்கு ஏன் ஓய்வு வயது அரசியல் நிர்ணய விதியில் இல்லை என்பது ஆச்சரியமாய் உள்ளது. வை கோ போராடுவேன் என்று கூறுகிறார்? எப்படி? பேசிகொண்டேஇருப்பதா? நீதிபதிகள்தான் கூறவேண்டும். உங்களுக்கு ஓய்வு தேதி இருப்பதுபோல் அரசியல்வாதிகளுக்கு இல்லை என்பது சரியா என்பதனை ஏன் சுட்டிக்காட்டவில்லை.? அரசியல்வாதிகளுக்கு வயது நிர்ணயம் இல்லதாவரை நாட்டில் தர்மம் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.


VENKATASUBRAMANIAN
அக் 25, 2025 08:40

வெட்கமே இல்லாமல் பேசுகிறார்கள். மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை