உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் மக்கள் வாழ இயலாத சூழல் ஏற்படும்: அன்புமணி

மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் மக்கள் வாழ இயலாத சூழல் ஏற்படும்: அன்புமணி

மயிலாடுதுறை: 'தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் மக்கள் வாழ இயலாத சூழ்நிலை ஏற்படும்' என பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.தமிழகம் முழுவதும், பயணம் மேற்கொண்டுள்ள பாமக தலைவர் அன்புமணி மயிலாடுதுறை மாவட்டம் வந்துள்ளார். கொள்ளிடம் அருகே அளக்குடி- திருக்கழிப்பாலை இடையே தடுப்பணை அமைக்க வலியுறுத்தி கொள்ளிடம் ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: விவசாயத்துக்கும், குடிநீர் தேவைக்காகவும் உடனடியாக தடுப்பணை கட்ட வேண்டும். காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீர் கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடலில் கலந்து வீணாகிறது. இந்த நீரை இப்பகுதி மக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. தடுப்பணை கட்டி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.மணல் கொள்ளையில் ஈடுபட முடியாது என்ற ஒரே நோக்கத்துடன் தடுப்பணை கட்ட தயக்கம் காட்டப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்து 26 மணல் குவாரிகளை அமைத்துள்ளனர். அதனால்தான் இதில் தடுப்பணை கட்டுவதற்கு திமுக அரசு தயங்குகிறது. விவசாயம், விவசாய தொழிலாளர்கள், மக்களை பற்றி திமுக அரசுக்கு கவலை இல்லை. மக்களையும், விவசாயத்தின் அழிக்க நினைக்கிறது திமுக. மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் மக்கள் வாழ இயலாத சூழ்நிலை ஏற்படும். திமுக மீண்டும் ஆட்சிக்கு வர இயலாது. மக்கள் விழிப்போடு இருக்கிறார்கள் . இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ