உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கதை கிடைத்தால் கமலுடன் நடிப்பேன்

கதை கிடைத்தால் கமலுடன் நடிப்பேன்

சென்னை:''கமலும் நானும் இணைந்து, மீண்டும் படம் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை. அதற்கான கதை, கதாபாத்திரம் கிடைக்கும் போது நடிப்போம்,'' என, நடிகர் ரஜினி தெரிவித்தார். நடிகர் ரஜினி நேற்று காலை 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' பயணியர் விமானத்தில், சென்னையில் இருந்து கோவை சென்றார். அவர் அளித்த பேட்டி; 'ராஜ்கமல், ரெட் ஜெயன்ட்' நிறுவனங்கள் சேர்ந்து, ஒரு திரைப்படம் தயாரிக்க உள்ளனர். அந்தப் படத்திற்கு இன்னும் இயக்குநர் யார் என்பது முடிவாகவில்லை. நடிகர் கமலும் நானும் இணைந்து, மீண்டும் படம் பண்ண வேண்டும் என்று, எனக்கு ஆசை. அதற்கான கதை, கதாபாத்திரம் கிடைக்கும்போது நடிப்போம். பிரதமர் நரேந்திர மோடிக்கு, என் பிறந்தநாள் வாழ்த்துகள். இவ்வாறு ரஜினி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ