உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கண்டதை எழுதினால் விடைப்புத்தகம் இனி செல்லாது!

கண்டதை எழுதினால் விடைப்புத்தகம் இனி செல்லாது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின், 'குரூப் 1' தேர்வுக்கு சம்பந்தமில்லாத கருத்துகளை எழுதினால், விடைப்புத்தகம் செல்லாததாகி விடும்' என, டி.என்.பி.எஸ்.சி., எச்சரித்துள்ளது.

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள அறிக்கை:

மாவட்ட உதவி கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு, குரூப் 1 எழுத்துத்தேர்வு நடத்தப்பட உள்ளது. ஏற்கனவே நடந்த தேர்வில் சிலர், வினாக்களுக்கு தொடர்பில்லாத விஷயங்களையும், தங்களை அடையாளப்படுத்தும் வகையிலும் எழுதி இருந்தனர். நடக்க உள்ள குரூப் 1, குரூப் 1பி உள்ளிட்ட தேர்வுகளில், அவ்வாறு யாரேனும் எழுதினாலோ, விடைப்புத்தகத்தின் பட்டைக்குறியீட்டை சேதப்படுத்தினாலோ, பிறருக்கு தெரியும்படி விடை எழுதுவது, மற்றவர்களின் விடைக்குறிப்பை பார்த்து எழுதுவது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டாலோ, அவர்களின் விடைப்புத்தகம் செல்லாததாக அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Rajan
நவ 27, 2024 09:15

ராம்சாமி பற்றி கேள்விகள் இருந்தால்?


ஆரூர் ரங்
நவ 27, 2024 07:38

உண்மைக்கு மாறான கேள்விகளை கேட்கும் TNPSC யை என்ன செய்யலாம்? குறிபிட்ட இயக்கத்தினரின், மதத்தின் கொள்கை வரலாறு பற்றியெல்லாம் கேள்வி கேட்பது தொடர்கிறது.இதன் பெயர் மதச்சார்பின்மையா?


KRISHNAN R
நவ 27, 2024 07:34

மெரிட் .. கோவிந்தா என்று சொல்ல ஒரு புதுவழி


Kasimani Baskaran
நவ 27, 2024 05:57

தவறாக பதில் எழுதி இருந்தால் தேர்வே செல்லாது என்று உலகின் வேறு எந்த ஒரு அரசும் இது வரை சொன்னதில்லை


Mani . V
நவ 27, 2024 05:45

ஆனால், விதிவிலக்காக "உதயநிதி வாழ்க, இன்பநிதி வாழ்க" என்று எழுதலாமா?


Rajan
நவ 27, 2024 09:15

கண்டிப்பாக பாஸ்


Lakshman Lakshman
நவ 30, 2024 11:29

Good


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை