உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆன்லைன் முறையை அமல்படுத்தியும் பயனில்லை: கட்டட அனுமதி வழங்குவதில் உள்ளாட்சிகள் தாமதம்

ஆன்லைன் முறையை அமல்படுத்தியும் பயனில்லை: கட்டட அனுமதி வழங்குவதில் உள்ளாட்சிகள் தாமதம்

சென்னை : 'ஆன்லைன்' முறை அமலுக்கு வந்தும், கட்டுமான திட்ட அனுமதி விண்ணப்பங்கள் மீது முடிவு எடுப்பதில், உள்ளாட்சி அமைப்புகள் தாமதம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் பொது கட்டட விதிகள், 2019ல் அறிவிக்கப்பட்டன. இதன்படி, 10,000 சதுர அடி வரையிலான குடியிருப்பு திட்டங்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகள் ஒப்புதல் வழங்கலாம். இதுதொடர்பாக, பொதுமக்கள் விண்ணப்பங்களை நேரடியாக அளிக்கும் போது, குறிப்பிட்ட காலத்தில் அனுமதி கிடைப்பதில்லை என்ற புகார் எழுந்தது.

30 நாட்களில் முடிவு

இதையடுத்து, அனைத்து உள்ளாட்சிகளிலும், ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள், வரைபடங்கள், கட்டணங்கள் பெறும் நடைமுறை அமலுக்கு வந்தது. இதில், விண்ணப்பம் மீது அதிகபட்சம், 30 நாட்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும்.

பொறியாளர்கள் இல்லை

ஆனால், பெரும்பாலான உள்ளாட்சிகளில் விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதில், அதிகாரிகள் மிகவும் தாமதம் செய்கின்றனர். இதனால், வீடு வாங்க முன்வரும் மக்கள், பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, கட்டுமான துறையினர் கூறியதாவது: உள்ளாட்சி பகுதிகளில், 3,500 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு, தானியங்கி முறையில் உடனடி ஒப்புதல் கிடைக்கிறது. அதற்கு மேல், 10,000 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு ஒப்புதல் கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில், கட்டட அனுமதி விண்ணப்பங்களை ஆய்வு செய்ய, தேவையான அளவுக்கு கட்டுமான துறைக்கான, சிவில் இன்ஜினியரிங் பொறியாளர்கள் இல்லை. இதனால், ஆன்லைன் முறையில் தாக்கலாகும் விண்ணப்பங்களை சரி பார்க்க, வெளி நபர்கள் உதவியை நாடுகின்றனர். அவர்கள் உதவியுடன், தங்கள் கண்காணிப்பில், விண்ணப்பங்களை அதிகாரிகள் பரிசீலனை செய்கின்றனர். எனினும், பெரும்பாலான விண்ணப்பங்கள் மீது, 30 நாட்களுக்குள் முடிவு எடுப்பதில்லை. இதில், 30 நாட்கள் கடந்த நிலையில், சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரை அழைத்து, விண்ணப்பத்தை திரும்ப பெற்று புதிதாக தாக்கல் செய்ய அறிவுறுத்துகின்றனர். இதற்கு ஒப்புக்கொண்டு புதிதாக விண்ணப்பம் தாக்கல் செய்தால் மட்டுமே, அதிகாரிகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கின்றனர். இதனால், கட்டுமான திட்ட அனுமதிக்காக, மாத கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது.

ஓரிரு நாளில் கிடைக்கும்

எங்கள் திட்டங்களில், முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்தவர்கள், வீடு வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது. 'ஆன்லைன்' விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலத்தில் முடிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'ஆன்லைன் முறையில் தாக்கலாகும் விண்ணப்பங்கள் தொடர்பாக, கூடுதல் விபரங்கள் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. அனைத்து விபரங்கள், இணைப்பு ஆவணங்களை முறையாக அளித்தால், ஓரிரு நாட்களிலேயே ஒப்புதல் பெற முடியும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

sundaran manogaran
நவ 20, 2024 17:17

ஆன்லைனில் யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று அறிவித்தால் விரைவாக அனுமதி பெறலாம்.....


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
நவ 20, 2024 10:12

லஞ்சம் கொடுத்துவிட்டால் எல்லாமே நடக்கும். இல்லாவிட்டால் ஆன்லைன் இல்லை ஆப்புதான்.


Sekar Times
நவ 20, 2024 08:59

எங்கெங்கு காணினும் லஞ்சம் என்றுதான் பாடவேண்டும்.


V GOPALAN
நவ 20, 2024 08:19

வீடு தேடி கல்வி, மருத்துவம் ,ரேஷன் எல்லாம் கோவிந்தா அதே போன்றுதான் கம்ப்யூட்டர் பட்டா , பிளாஸ்டிக் பேப்பர் ஒழிப்பு வீடு கட்ட அனுமதி போன்றவையும். வீடு தேடி டாஸ்மாக் கஞ்சா லஞ்ச பணம் கருப்பு பணம் எல்லாம் சரியாக நடக்கும் இந்தா ஆட்சி yil


GMM
நவ 20, 2024 08:15

திராவிட கட்சிகள் வந்த பின் உள்ளாட்சிகள் தெரு கூட்ட, சாக்கடை அள்ள, பிறப்பு - இறப்பு பராமரிக்க அதிகம் பயன்படுத்த பட்டன. நகர் முழுவதும் கட்டட அனுமதி வழங்கும் அளவிற்கு ஊழியர், பொறியாளர் இல்லை? வருவாய், பத்திர பதிவு உறவை நகராட்சி விரும்புவது இல்லை. அனைத்தும் சொத்து மோசடிக்கு ஏற்றவை. சொத்து வரியில் ஏராளமான குளறுபடிகள். பத்திர பதிவு ஒருவருக்கு, பட்டா ஒருவருக்கு, சொத்து வரி ஒருவருக்கு என்பது சாதாரணம். மாநிலத்தை நான்கு பகுதி ஆக்கி, ஆன்லைன் மூலம் முறைப்படுத்த வேண்டும். ஒரு வீட்டிற்க்கு சில கதவிலக்கம். ஒரு வார்டிற்கு சில எண். சில முறை தெரு பெயர் மாற்றம். 30 ஆண்டுக்கு மேற்பட்ட பத்திர விவரம் அதிகம் மாறுபடும்.


KRISHNAN R
நவ 20, 2024 07:57

7-1/2 போ ட தெரியணும்... அப்போ தான் ஒன் லையன் வேலை செய்யும்.


VENKATASUBRAMANIAN
நவ 20, 2024 07:47

என்ன ன்ன செய்தால் என்ன அதை அப்ரூவ் செய்வதும் ஒரு மனிதனே. அப்புறம் எப்படி அவன் காசில்லாமல் செய்வான். இவர்களுக்கெல்லாம் டிஸ்மிஸ் ஒன்றே தண்டனை யாக இருக்கவேண்டும். அப்போதுதான் பயம் இருக்கும். இல்லையென்றால் எத்தனை நீதிமன்றம் வந்தாலும் தப்பித்து விடுவார்கள். சட்ட திருத்தம் அவசியம் தேவை


R.RAMACHANDRAN
நவ 20, 2024 07:03

இந்த நாட்டில் வாய்மையே வெல்லும் என்பது வெறும் பெயரளவிற்கே. அரசாங்கங்களின் மூன்று அங்கங்களும் பொய் பேசுவதால் மற்றவர்களும் அதையே பின்பற்றுகின்றனர். அதனை பின்பற்றாதவர்கள் பொய்யுரைத்து வாழ்பவர்களால் நசுக்கப்படுகின்றனர்.


raja
நவ 20, 2024 06:57

திருட்டு திராவிட விடியா மாடல் ஆட்சியில் கட்டிங் கமிஷன் கரப்சன் இல்லாமல் எந்த வேலையும் நடக்காதே....


Ram
நவ 20, 2024 06:19

மறைமலை நகர் நகராட்சியில் ஒரு கிச்சன் ஒன்றிற்கு Rs30000 வாங்கினால், அரசு கொண்டு வரும் திட்டத்தால் பயன் அற்று போகும்.


புதிய வீடியோ