உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீலகிரியில் எனக்கும் அதிமுக வேட்பாளருக்கும் தான் போட்டி: சொல்கிறார் ஆ.ராசா

நீலகிரியில் எனக்கும் அதிமுக வேட்பாளருக்கும் தான் போட்டி: சொல்கிறார் ஆ.ராசா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அன்னூர்: ''நீலகிரி தொகுதியில் எனக்கும், அதிமுக வேட்பாளரான முன்னாள் சபாநாயகர் தனபால் மகனுக்கும் தான் போட்டி. பா.ஜ.,வை நான் போட்டியாகவே நினைக்கவில்லை'' என திமுக வேட்பாளர் ஆ.ராசா பேசியுள்ளார்.நீலகிரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட அன்னூர் பகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: நான் மன்மோகன்சிங், ஐ.கே.குஜ்ரால், தேவகவுடா, வாஜ்பாய் என பல பிரதமர்களை பார்த்துள்ளேன். பார்லிமென்டுக்கே வராத ஒரே பிரதமர் மோடி. சுதந்திரத்திற்கு முன் இந்தியா மொழியால், இனத்தால், கலாசாரத்தால் தனித்தனியாக இருந்தது. இந்தியா அரசியல சாசன சட்டத்தின் மூலம் தான் ஒன்றாக்கப்பட்டது.

சிறந்த தலைவர்

அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரை விட சிறந்த தலைவர் ஸ்டாலின். தற்போது இந்தியாவை காக்க வேண்டிய பெரிய பொறுப்பு ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது. நீலகிரி தொகுதியில் எனக்கும், அதிமுக வேட்பாளரான முன்னாள் சபாநாயகர் தனபால் மகனுக்கும் தான் போட்டி. பா.ஜ.,வுக்கு கட்டமைப்பு இந்த தொகுதியில் கிடையாது. அவர்களை நான் போட்டியாகவே நினைக்கவில்லை.இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் சிலிண்டர் விலை பாதியாக குறைக்கப்படும். 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் 400 ரூபாயாக உயர்த்தப்படும். ஜாதி, மத சண்டை இல்லாத அமைதியான தொகுதி நீலகிரி தொகுதி. இங்கு பா.ஜ.,வின் வேலைகள் பழிக்காது. மாநில உரிமைகளை பறித்ததன் வாயிலாக முதல்வர்களை ஹெட் மாஸ்டர்களாக சாதாரண நகராட்சி சேர்மன்களாக மோடி மாற்றி வருகிறார். மோடி மீண்டும் வெற்றி பெற்றால் இந்தியா என்கிற அமைப்பு இருக்குமா என்னும் சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளது. இவ்வாறு ஆ.ராசா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 59 )

Pushpa sri
ஏப் 06, 2024 18:12

Good


G Ragavendran
ஏப் 06, 2024 14:27

அப்படி என்றால் பீ ஜே பி பற்றி பேசக்கூடாது


ram
ஏப் 03, 2024 16:13

ஹிந்து மக்களை என்று சொன்னவன்


Mohanakrishnan
ஏப் 03, 2024 13:52

Yes who is second and third between DDMK and ADMK


Mohanakrishnan
ஏப் 03, 2024 13:51

எஸ் உண்மை யார் or என்று போட்டி


Suresh sridharan
ஏப் 02, 2024 08:18

DMK ADMK ஆமா உங்க ரெண்டு பேரையும் ஒதுக்கினாலே நாடும் நாட்டு மக்கள் உருப்படுவார்கள்


தத்வமசி
ஏப் 01, 2024 22:52

இந்த முறை ராசா அவர்கள் மூன்றாமிடத்திற்குத்தான் வருவார் உங்கள் இருவரின் திரைமறைவு நட்பு உலகத்திற்கே தெரியும் அதனால் எதிமுக உங்களுக்கு எதிரி அல்ல மக்கள் சொல்வார்கள் யாருக்கும் யாருக்கும் போட்டி என்று


PREM KUMAR K R
ஏப் 01, 2024 22:46

அப்படியென்றால் நீங்களும் உங்களுக்காகப் பிரச்சாரம் செய்ய வருபவர்களும் மோடிக்கு அர்ச்சனை செய்வதை நிறுத்துங்கள்


R Kay
ஏப் 01, 2024 22:07

தோற்பதிலா போட்டி ராசா?


N Ravi
ஏப் 01, 2024 21:38

Ho stalin is more intelligent than CN Annadurai Very good I dont have knowledge more in politics to compare but I know who is Annaduarai


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை