வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கேரளா நடிகனுகளுக்கு வை துடுப்பு அதிகம், நல்ல புடிங்கிட்டு விட்டதன் சரி varuvan
சென்னை:நடிகரும், இயக்குநருமான பிருத்விராஜுக்கு, வருமான வரித்துறையினர், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளனர். பிரித்விராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடித்த, லுாசிபர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான, எம்புரான் கடந்த மாதம், 27ம் தேதி வெளியானது. படம் வெளியான நாள் முதல் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானது. இந்நிலையில், எம்புரான் பட இயக்குநரும், கேரள நடிகருமான பிருத்விராஜுக்கு, வருமான வரித்துறையினர் இ- - மெயில் வாயிலாக, நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில், பிருத்விராஜ் நான்கு திரைப்படங்களுக்கு இணை தயாரிப்பாளராக இருந்த போது, அவர் ஈட்டிய வருவாய் தொடர்பான கணக்கு விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன. அத்துடன், கோல்டு, ஜனகன மன, கடுவா' போன்ற படங்களிலும் பிரித்விராஜ் நடித்துள்ளார். இந்த படங்களில் நடிகருக்கான ஊதியம் பெறாமல், மாறாக இணை தயாரிப்பாளர் என்ற அடிப்படையில், 40 கோடி ரூபாய் வரை அவர் வருமானம் பெற்றுள்ளார் என்ற செய்திகள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், இந்த மூன்று படங்களின் வருமானம் குறித்த கணக்குகளை, வரும் 29ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு, வருமான வரித்துறையினர் நோட்டீசில் தெரிவித்து உள்ளனர்.
கேரளா நடிகனுகளுக்கு வை துடுப்பு அதிகம், நல்ல புடிங்கிட்டு விட்டதன் சரி varuvan