உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு

பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு

கோவையில் மாணவியை பாலியல் வன்முறை செய்த குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனாலும், தமிழகத்தில் பாலியல் வன்முறை அதிகரிப்பது கவலை அளிக்கிறது. சட்டசபையில் அளித்த கொள்கை விளக்க குறிப்பில், 2024ல் போக்சோ வழக்கு எண்ணிக்கை 3,407ல் இருந்து, 5,319 ஆக அதிகரித்துள்ளது; பாலியல் வன்கொடுமை வழக்குகள் 406ல் இருந்து, 471 ஆக அதிகரித்துள்ளன. இவை, பெண்கள் பாதுகாப்பில், தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதையே காட்டுகிறது. தமிழகத்தில், பெரும்பாலான குற்ற சம்பவங்கள், போதையில் இருப்பவர்களாலேயே நடக்கின்றன. இந்தியாவில் அதிகளவில் மது அருந்துவதில், இரண்டாவது மாநிலமாக தமிழகம் உள்ளது. மக்கள் தொகையில், 12 சதவீதம் பேர் குடிநோயாளிகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பீ ஹாரில், மதுவிலக்கு அமலுக்கு வந்த பின், அங்கு பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறைந்துள்ளன. அதை பின்பற்றி, கடந்த 2016 தேர்தலில், 'பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம்' என அளி த்த வாக்குறுதியை அமல்படுத்த வேண்டும். - திருமாவளவன் தலைவர், விடுதலை சிறுத்தைகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ