உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  நீதித்துறையை அச்சுறுத்துகிறது இண்டி கூட்டணி

 நீதித்துறையை அச்சுறுத்துகிறது இண்டி கூட்டணி

நீதித்துறையை அச்சுறுத்துகிறது 'இண்டி' கூட்டணி

உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக, தி.மு.க., அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஆனாலும், சிறுபான்மையினரை தாஜா செய்யும் அரசியலுக்காக, நீதிபதி சுவாமிநாதனை தகுதி நீக்கம் செய்யும் தீர்மானம் கொண்டு வர, 'இண்டி' கூட்டணி கட்சிகள், லோக்சபா சபாநாயகரிடம் 'நோட்டீஸ்' கொடுத்துள்ளன. இது, ஓட்டு வங்கி அரசியலுக்காக, 'இண்டி' கூட்டணி நடத்தும் நாடகம். எந்தவொரு நீதிபதியின் தீர்ப்பையும், 'இண்டி' கூட்டணி விரும்பவில்லை என்றால், நீதித்துறையை அடிபணிய செய்ய, அச்சுறுத்தும் ஒரு கருவியாக பதவி நீக்கத்திற்கான நோட்டீஸ் கொடுப்போம் என்பது தான், அவர்கள் சொல்லும் செய்தியா? - - அண்ணாமலை, முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை