உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இண்டியா கூட்டணி கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்காமல் நழுவல்

இண்டியா கூட்டணி கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்காமல் நழுவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: லோக்சபா தேர்தல் மற்றும் பிரதமரை தேர்ந்தெடுப்பது குறித்து எதிர்க்கட்சிகளின் 'இண்டியா' கூட்டணி இன்று (ஜூன் 1) ஆலோசனை கூட்டம் நடத்துகிறது. இதில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் எனவும், அவருக்கு பதிலாக திமுக எம்.பி., டி.ஆர்.பாலு பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட லோக்சபா தேர்தலில், இதுவரை ஆறு கட்டம் முடிந்து விட்டது. நாளை (ஜூன் 1) ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலும், 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடக்கிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றால், பிரதமர் யார் என்பதை முடிவு செய்ய, 'இண்டியா' கூட்டணி தலைவர்கள், ஜூன் 1ல் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர். அதற்காக டில்லி வருமாறு, 28 கட்சிகளின் தலைவர்களுக்கு, காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.இந்த கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என மேற்குவங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா ஏற்கனவே அறிவித்திருந்தார். லோக்சபா தேர்தலிலும், மேற்குவங்க மாநிலத்தில் இண்டியா கூட்டணியாக போட்டியிடாமல், தனித்து களம் கண்டதால் மம்தா இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டாலினுக்கு பதிலாக திமுக எம்.பி., டி.ஆர்.பாலு பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்தல் முடிவுகள் ஜூன் 4ல் வெளியாகும் நிலையில், வெற்றி பெறுவோமா என்றே தெரியாத நிலையில் முன்கூட்டியே கூட்டம் நடத்துவது எந்த வகையில் பலனளிக்கும் எனத் தெரியவில்லை. ஏனெனில் தேர்தல் முடிவுகளில் அதிக எம்.பி.,க்களை பெறும் எந்த கட்சிகள் பெறும் எனத் தெரியாத நிலையில், அவர்களும் பிரதமர் பதவிக்கு போட்டிப்போட வாய்ப்புள்ளது. இதனால், நாளை நடைபெற உள்ள கூட்டத்திலேயே இண்டியா கூட்டணி சார்பிலான பிரதமரை வேட்பாளரை முடிவு செய்வது சந்தேகமே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 89 )

sundarsvpr
ஜூன் 03, 2024 18:40

தி மு க தலைவர் ஸ்டாலின் நினைவு டெல்லியை நோக்கி இல்லை. அரசியலில் அண்ணா தி முக மூன்றாம் இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டால் தமிழ்நாட்டு அரசியலில் 2031 இல் குடும்ப ஆட்சி மறைந்துவிடும் இதன் வெளிப்பாடு. தி மு க வில் இரண்டாம் கட்ட தலைவர்கள் .தொண்டர்கள் மன மகிழ்ச்சி ஏற்படும். செயல்குழு உறுபினர்கள் கருது கட்சியில் எடுபடும்


saiprakash
ஜூன் 03, 2024 15:09

,24 ல மீண்டும் வரணும் , வந்து சப்போர்ட் பண்ணுகிற சேர்ந்து உருகுவார்


RAMAMOORTHY GOVI
ஜூன் 03, 2024 13:12

இவனுங்க அங்கே போயி மறுபடியும் பெஞ்ச தேக்க போறானுங்க


Dwarakanath Putti
ஜூன் 02, 2024 03:54

விடியாத திமுக வின் தலைவர்கள் தேர்தல் முடிவிற்கு பின்னர் மோடி ஜி மட்டும் அமித்ஷா காலில் விழுந்து கதறுவதற்க்கே வாய்ப்புகள் அதிகம் . தமிழகத்தில் 39 சீட்டு பெற்றாலும் இது தான் நடக்கும் .திஹார்க்கு செல்ல மனது அளவில் தயாராக இருங்க தீய முக வின் தலைவர்களே


Barakat Ali
ஜூன் 02, 2024 17:36

திமுக பேரம் பேசி சமாதானம் ஆகிவிடும் .... காமன் மினிமம் ப்ரோக்ராம் என்று சப்பை கட்டு கட்ட அக்கட்சியின் அடிமைகள் ரெடி ....


Ramar P P
ஜூன் 01, 2024 23:43

இப்பவே ஒரு ஆள்மம்தா பானர்ஜி கால் வாரியாச்சு.இவங்களெல்லாம் ஆட்சி அமைச்சு உருப்பட்ட மாதிரிதான்.


tmranganathan
ஜூன் 01, 2024 18:35

மண்ணை கேகவ்விவிடுவோம் என்ற பயம் மூஞ்சி யில் தெரிகிறது. மோடி பதவி ஏற்பார் அவர் காலில் இந்தாள் விழுவார்.


panneer selvam
ஜூன் 01, 2024 15:32

let everyone should know what happened one of the earlier I.N.D.I.A meetings , all these leaders could speak mostly in Hindi and some in English , if so how Stalin ji will understand . Even if asks for translation , other party leaders are shouting at Stalin ji .So Stalin ji will attend the meeting only if they speak in Tamil .


M S RAGHUNATHAN
ஜூன் 01, 2024 15:06

அங்கு போய் சமோசா, மிக்சர் சாப்பிடுவார்.


Narayanan
ஜூன் 01, 2024 14:07

இந்தியா கூட்டணி தோல்வி உறுதியாகிய நிலையில் , பிஜேபிக்கு சாதகமாகும் நிலையில் நீதிமன்றம் மூலம் தேர்தல் செல்லாது என்று அறிவிக்க செய்யலாம் . தனித்தனியாக வழக்கு பதிவு செய்யலாம் என்று ஆலோசிக்கத்தான் இந்த கூட்டம் . இபபோது உச்சநீதிமன்றம் மத்திய அரசுடன் சுமூகமாக இல்லாத நிலையில் நடத்திக்காட்டலாம் என்று பேசுவார்கள் . பார்போம் இறைவன் மிகப்பெரியவன்.


ராது
ஜூன் 01, 2024 11:56

ஏன் உதயநிதி போவதில்லை - இளங்கன்று பாசறையை பறைசாற்றா நல்ல சந்தர்ப்பம் - ஹிந்தி படிக்க நல்ல நேரம் -


வாய்மையே வெல்லும்
ஜூன் 02, 2024 18:13

மீட்டிங் ஆந்திராவில் வைத்தார்கள் என்றால் மக்கள் நன்கு இளையவரை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிப்பார்கள். பழைய காலனிக்கு கிராக்கி ஆகிவிடும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை