உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2047க்குள் 35 ட்ரில்லியன் பொருளாதாரத்தை இந்தியா அடையும்: பியூஷ் கோயல் பேச்சு

2047க்குள் 35 ட்ரில்லியன் பொருளாதாரத்தை இந்தியா அடையும்: பியூஷ் கோயல் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''2047க்குள் 35 ட்ரில்லியன் பொருளாதாரத்தை இந்தியா அடையும். இதனை தமிழகமும் கவனத்தில் கொள்ள வேண்டும்'' என உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில் குறிப்பிட்டார்.சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், வணக்கம், நமஸ்காரம் என்றுக்கூறி உரையை மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் துவக்கினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ds2h6qcb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தொடர்ந்து அவர் பேசியதாவது: இயற்கையில் சிறந்த மாநிலம் தமிழகம். முதலீடு செய்ய வந்துள்ளவர்களை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு ட்ரில்லியன் இலக்கை தமிழகம் எட்ட வாழ்த்துக்கள். ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனர் தமிழகத்தை சேர்ந்தவர் தான். அவரை பாராட்டுவோம். இஸ்ரோ விஞ்ஞானிகளை முன்னின்று நடத்தியவர் பிரதமர் மோடி. 100வது சுதந்திர தின விழாவின் போது, இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக இருக்கும்.

தமிழகத்திற்கு தனி இடம்

இந்தியா வலிமை அடைய நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சீரான வளர்ச்சி அடைய வேண்டும். தமிழகத்தின் 1 ட்ரில்லியன் இலக்கு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும். 1 ட்ரில்லியன் பொருளாதார இலக்குக்காக முதல்வர் ஸ்டாலினை பாராட்டுகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் தொழில் வளர்ச்சியில் தமிழகத்துடன் இணைந்து மத்திய அரசு பணியாற்றுகிறது.பிரதமர் மோடியின் இதயத்தில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு தனி இடம் உள்ளது. இந்தியாவின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் செங்கோல் தமிழகத்தை சேர்ந்தது. இந்தியாவின் பண்பாட்டிற்கு தமிழக கலாச்சாரம் அளித்து வரும் பங்கு மிகப்பெரியது. இந்தியாவின் கலாச்சார தொடர்புகளை பிரதிபலிக்கவே காசி சங்கமம் போன்ற நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

இளைஞர்கள் அதிகம்

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் 10 ஆண்டுகளாக நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு நலிவடைந்த பொருளாதாரத்தில் இருந்தது இந்தியா. தற்போது இந்தியா வளர்ச்சியடைந்த முதல் 5 நாடுகளின் பட்டியலில் உள்ளது. உலகிலேயே மக்கள் தொகையில் இளைஞர்களை அதிகம் கொண்ட நாடு இந்தியா. 2047 என்ற இலக்கை நோக்கி நாட்டை வேகமாக முன்னெடுத்து செல்கிறோம். தரமான கல்வி, சுகாதாரம், குடிநீர் வழங்குவதில் கவனம் செலுத்துகிறோம். 2047க்குள் ஒவ்வொன்றிலும் காலனி அடிமைத்தனத்தில் இருந்து மீளுவோம். இந்தியாவின் 100வது சுதந்திர தினத்திற்குள் ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடைவோம்.

35 ட்ரில்லியன்

இந்தியாவை வளர்ந்த நாடாக்குவது ஒவ்வொருடைய கனவாக இருக்க வேண்டும். ஊழலில்லாத இந்தியா, பெண்களின் சக்தியை வலிமைப்படுத்தும் வகையில் செயல்படுவோம். பெண்களுக்கு பார்லிமென்டில், இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மிக மகிழ்ச்சியான செய்தி. 2047க்குள் 35 ட்ரில்லியன் பொருளாதாரத்தை இந்தியா அடையும். இதனை தமிழகமும் கவனத்தில் கொள்ள வேண்டும்.உலகிலேயே தொழில் வளர்ச்சிக்கு மிக சிறந்த இடங்களில் ஒன்று தமிழகம். 2014 முதல் பிரதமர் மோடி எடுத்த தொடர் நடவடிக்கையால் தொழில்துறை வலுவாக உள்ளது. மத்திய அரசின் முயற்சிகளுக்கு ஆதரவாக செயல்படும் தமிழக அரசுக்கு நன்றி. முதலீட்டாளர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து தருவோம் என உறுதியளிக்கிறோம். இவ்வாறு பியூஷ் கோயல் பேசினார்.

நினைவுப் பரிசு

உலக முதலீட்டாளர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ள மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு ஜல்லிக்கட்டு காளை அடக்கப்படும் சிலையை நினைவுப்பரிசாக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

அப்புசாமி
ஜன 08, 2024 06:39

முதலீட்டாளர் மாநாட்டில் வந்து மோடி பஜனை....


Barakat Ali
ஜன 07, 2024 16:37

பொருளாதாரத்தை பத்தி நிம்மிம்மாவும் பேசறாங்க ..... கோயபல்சும் சாரி ....


g.s,rajan
ஜன 07, 2024 16:27

Ha....Ha....


g.s,rajan
ஜன 07, 2024 15:47

I m not a Tasmac Addict....


R.Subramanian
ஜன 07, 2024 15:38

காலனி அடிமைத்தனத்தில் இருந்து மீள வேண்டும் என்று மத்திய ஆட்சியாளர்கள் முயற்சிகளை செய்கிறார்கள் ஆனால் தமிழகத்தில் இன்னமும் ஆங்கிலேய அடிமை சிந்தனை வேர் ஊன்றி உள்ளது. ஆங்கிலேயர்கள் இல்லையென்றால் நமக்கு கல்வி மருத்துவம் இல்லை என்ற சிந்தனை பிரச்சாரம் தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. முதலில் தமிழக ஆட்சியாளர்களிடம் உள்ள ஆங்கிலேய அடிமை சிந்தனையில் இருந்து வெளியே வர வேண்டும்.


அப்புசாமி
ஜன 08, 2024 06:40

அதுக்குத்தானெ ராஜ்நாத் சிங் இங்கிலாந்து போறாரு? அடிமைத்தனத்தை நீக்கிட்டு வந்துருவாரு.


A1Suresh
ஜன 07, 2024 14:56

பாஜக ஆட்சியில் மட்டுமே அது சாத்தியம் . மற்ற கிச்சடி கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் பூஜ்ஜியம் . மாண்புமிகு மந்திரி அதை சொல்ல மறந்துவிட்டார் . ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு நிலையான ஆட்சி என்பது இன்றியமையாதது . நிலையான ஆட்சியாக இருந்தால் மட்டும் போதாது . அது நல்லவர்களின் ஆட்சியாக , நாட்டை நேசிக்கும் வல்லவர்கள் ஆட்சியாக , மக்களை பூசிக்கும் பக்தர்களின் ஆட்சியாக இருத்தல் வேண்டும் . எனவே புள்ளி வைத்த கூட்டணிக்கு ஓட்டளிக்க கூடாது . மோடிஜிக்கு மட்டுமே வாக்களியுங்கள்


அப்புசாமி
ஜன 07, 2024 14:35

லட்ச லட்சமா, கோடி கோடியா அடிச்சு உடலாம். இவிங்க ட்ரில்லியன் ட்ரில்லியனா அடிச்சு உடறாங்க


Sakthi Parthasarathy
ஜன 07, 2024 12:37

இலக்கு எட்டினால் மிகவும் நல்ல விஷயம். முதலீட்டுக்கு வரும் தொழில்கள் சுற்று சூழலை பாதிக்குமா என தீர ஆராய்ந்து அனுமதி கொடுக்க வேண்டும்.


g.s,rajan
ஜன 07, 2024 12:15

What about Tomorrow ???...


hari
ஜன 07, 2024 14:50

tomorrow tasmac is open rajan


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ