உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்தியன் 2, தக் லைப் தோல்விகள்: இந்தியன் 3 எதிர்காலம் என்ன?

இந்தியன் 2, தக் லைப் தோல்விகள்: இந்தியன் 3 எதிர்காலம் என்ன?

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன். அவருக்கு அடுத்தடுத்து 'இந்தியன் 2, தக் லைப்' என இரண்டு பெரிய தோல்விகள். தமிழ் சினிமாவின் உச்ச இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். அவருக்கு 'இந்தியன் 2, கேம் சேஞ்ஜர்' என அடுத்தடுத்து இரண்டு தோல்விகள். இந்தத் தோல்விகள் அவர்களை மட்டும் பாதிக்கவில்லை. தமிழ் சினிமாவையும் சேர்த்து பாதிக்க வைத்தது.ஷங்கர், மணிரத்னம் ஆகியோருடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கூட்டணி அமைத்திருந்தார் கமல்ஹாசன். 1996ல் வெளிவந்த 'இந்தியன்' படத்திற்குப் பிறகு 28 ஆண்டு இடைவெளியில் ஷங்கருடனும், 1987ல் வெளிவந்த 'நாயகன்' படத்திற்குப் பிறகு 37 ஆண்டு இடைவெளியில் மணிரத்னத்துடனும் இணைந்த படங்கள் இப்படியொரு தோல்வியைத் தரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. இதனால், ஷங்கர், மணிரத்னம், கமல்ஹாசன் ஆகியோரது அடுத்த படங்கள் குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.'இந்தியன் 2' வெளியீட்டிற்கு முன்னதாகவே 'இந்தியன் 3' குறித்த செய்திகள் வந்தன. பட வெளியீட்டிற்குப் பின்னர் 'இந்தியன் 3' குறித்து இதுவரையிலும் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இன்னும் சில காட்சிகளை படமாக்க வேண்டிய உள்ளது என்று மட்டும் தகவல் வெளியாகி இருந்தது.இப்போதுள்ள சூழ்நிலையில் 'இந்தியன் 3' படம் மீண்டும் ஆரம்பமாகுமா, அதை முடித்து வெளியிட சம்பந்தப்பட்டவர்கள் ஆர்வம் காட்டுவார்களா என்பது தெரியவில்லை. 'தக் லைப்' படத்தின் தோல்விக்குப் பிறகு அந்த ஆர்வம் நீடித்திருக்குமா என்பதும் புரியாத புதிர் தான்.கமல்ஹாசனுக்கு அடுத்து ஒரு பிரம்மாண்ட வெற்றி தேவைப்படுகிறது. அந்த வெற்றிக்குப் பிறகு 'இந்தியன் 3' வருவதுதான் உகந்ததாக இருக்கும் என கோலிவுட்டில் நினைக்கிறார்கள்.அதேப்போல் ஷங்கரும் அவரது அடுத்த கனவுப் படைப்பான 'வேள்பாரி' மூலம் மீண்டு வந்து பின்னர் 'இந்தியன் 3' படத்தை எடுக்கலாம் என கோலிவுட்டில் பேசுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

கண்ணன்
ஜூலை 09, 2025 11:23

மூவரையும் போர்த்திக் கொண்டு படுக்கச் சொல்லவும்


Mecca Shivan
ஜூலை 09, 2025 10:24

எப்படியோ இருந்த தன்மானத்தை இருந்த லெட்டர் பேட் கட்சியை அடகுவைத்து MP பதவி பெற்றாகிவிட்டது .. இனிமேல் சினிமால ஓடினால் என்ன ஓடாவிட்டா என்ன ?


Ragupathy
ஜூலை 09, 2025 08:25

ரஜினி...கமல்...காலம் முடிந்து விட்டது...இனி நடிக்கக் கூடாது...


Sathya
ஜூலை 09, 2025 07:24

Let him retire from public life and enjoy his life with old ladies.


Kalyan Singapore
ஜூலை 09, 2025 00:09

நம்மவர் கருத்து சொல்வதில் வல்லவர் . சிவாஜி நடிப்போடு நிறுத்தியிருக்க வேண்டும் .அரசியலுக்கு வந்திருக்கக்கூடாது , கன்னடம் தமிழிலிருந்து வந்தது , காம வெறி ஒரு போதை தான் தவறு இல்லை ... ஆனால் அதன் படி நடப்பாரா? இல்லை தானும் அரசியலில் குதிப்பார், டீம்கவிற்கு காவடி தூக்குவார் . இதையெல்லாம் பார்க்கும் மக்கள் முட்டாள்களா ? அவர் படத்தை திரையரங்கில் பார்த்து நேரத்தை வீணடிக்க மாட்டார்கள் அதுதான் ஒரே மாதத்தில் Netflix போன்ற OTT தளங்களில் வந்து விடுகிறதே ?


ராஜ்
ஜூலை 08, 2025 23:47

அது அவ்வளவு தான் பூட்ட கேசு


Indhiyan
ஜூலை 08, 2025 22:30

படம் பூரா அறிவுரைகளை பேசி,பேசி, பேசி ,பேசி ... காதை அறுக்கக்கூடாது. இந்தியன் 2 பூராம் அப்படிதான் காது வலித்தது. அறிவுரையை செயலில்/காட்சியில் காட்ட வேண்டும், நாக்கில் அல்ல. அதோடு, பலநூறு கோடி போட்டு படம் எடுக்கும் முன், அதை ஒரு மாடல் மாதிரி யாரையாவது நடிக்க சொல்லி சிம்பிள்ஆக எடுத்து அதை நல்ல விமர்சர்களிடம் காட்டி பார்க்க வேண்டும் [ரகசியமாக]. யானைக்கும் அடி சறுக்கும் என்பதை மனதில் வைக்க வேண்டும்.


RRR
ஜூலை 08, 2025 21:12

படம் கண்டிப்பாக ஊத்திக்கும்...


D Natarajan
ஜூலை 08, 2025 21:01

இந்தியன் 3 கோவிந்தோ


mocking
ஜூலை 08, 2025 20:20

கருத்து சொன்ன எல்லாரும் ஈன பிறவிகள்


சமீபத்திய செய்தி