உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொழில், வணிக கட்டடங்களுக்கு இனி கூடுதல் எப்.எஸ்.ஐ., உண்டு; விதிகளை திருத்தி அரசு உத்தரவு

தொழில், வணிக கட்டடங்களுக்கு இனி கூடுதல் எப்.எஸ்.ஐ., உண்டு; விதிகளை திருத்தி அரசு உத்தரவு

சென்னை ; தொழில் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான கட்டுமான திட்டங்களை ஊக்குவிக்க, எப்.எஸ்.ஐ., எனப்படும், தளப்பரப்பு குறியீடு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. இதற்காக பொது கட்டட விதிகளை திருத்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் பொது கட்டட விதிகள், 2019ல் அமலுக்கு வந்தன. நடைமுறையில் எழும் தேவைகளின் அடிப்படையில், இந்த விதிகளில் அவ்வப்போது திருத்தங்கள் செய்யப்படுகின்றன. அந்த வகையில், தொழில் வளர்ச்சி அதிகமுள்ள பகுதியில் கட்டு மானத் திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில், விதிகளை திருத்த திட்டமிடப்பட்டது.இதற்காக பல்வேறு துறையினரின் கருத்துகள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில், தொழில், வணிக வளர்ச்சியை ஊக்குவிக்க, கட்டடங்களுக்கான பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. இது தொடர்பான அரசாணையை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் காகர்லா உஷா வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:அடுக்குமாடி குடியிருப்புகள் போல, அடுக்குமாடி தொழில் கட்டடங்களை அனுமதிக்க, பொது கட்டட விதிகளில் புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரு அடுக்குமாடி கட்டடத்தில், வெவ்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்படுவதற்கு ஏற்ப, இந்த விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உற்பத்தி, ஒன்று சேர்த்தல், இருப்பு வைத்தல் போன்ற தலைப்புகளில், தொழில் நிறுவனங்களின் தேவை அடிப்படையில் விதிகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

குளோபல் எப்.எஸ்.ஐ.,

குடியிருப்பு, தொழில், வணிக கட்டடங்களுக்கு தேர்வு செய்யப்படும் மனை பரப்பளவில், எத்தனை மடங்கு என்ற அடிப்படையில், எப்.எஸ்.ஐ., எனப்படும் தளப்பரப்பு குறியீடு அனுமதிக்கப்படுகிறது. தொழில் நிறுவனங்களுக்கு, கூடுதல் சலுகை வழங்கும் வகையில், 'குளோபல் எப்.எஸ்.ஐ.,' என்ற தலைப்பு சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு தொழிற்சாலை கட்ட, மனை அடிப்படையில் மட்டும் பார்க்காமல், அத்திட்டத்தின் மொத்த பரப்பளவு அடிப்படையில், கட்டடங்களுக்கான தளப்பரப்பு குறியீட்டை கணக்கிடும் புதிய முறை அமல்படுத்தப்படுகிறது.தமிழக அரசின் சிப்காட், சிட்கோ போன்ற பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து, தனியார் நிறுவனங்கள், தொழில் பூங்காக்களை அமைப்பது தொடர்பான, கட்டுமான விதிகளும் சேர்க்கப்பட்டு உள்ளன. இதில், திட்டத்தின் குறைந்தபட்ச பரப்பளவு, 100 ஏக்கராக இருக்க வேண்டும்.

புதிய சலுகைகள்

பச்சை, ஆரஞ்ச், சிவப்பு வகை தொழில்களை சேர்ந்த கட்டடங்கள் கட்டும்போது, அவை அமையும் இடத்தில், சாலையின் குறைந்தபட்ச அகலம், 30 அடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளதுகட்டடங்களின் அதிகபட்ச உயரம், 60 அடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது கட்டடங்களுக்கு, 1.5 மடங்கு என இருந்த தளப்பரப்பு குறியீடு, இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது அடுக்குமாடி தொழில் கூடங்களுக்கு, அதிகபட்சமாக அனுமதிக்கப்படும் தளப்பரப்பு குறியீடு, மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுஉள்ளது தொழில் நிறுவனம் சார்ந்த குடியிருப்புகள், தங்குமிடங்கள், விடுதி களை கட்டுவதற்கும், தளப்பரப்பு குறியீடு, பக்கவாட்டு காலியிட விதிகளில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன மெட்ரோ உள்ளிட்ட போக்குவரத்து வழித்தடங்களை ஒட்டிய நிலங்களில் கட்டப்படும் கட்டடங்களுக்கான புதிய விதிகள் தனியே வகுக்கப்பட்டுள்ளன இவ்வகை கட்டடங்களுக்கு, குறைந்தபட்ச தளப்பரப்பு குறியீடு, 3.25 எனவும், அனுமதிக்கப்படும் அதிகபட்ச தளப்பரப்பு குறியீடு, மனையின் பரப்பில் ஆறு மடங்காகவும் இருக்கும்சென்னை போன்ற நகரங்களில், மைய வணிகப் பகுதி மற்றும் மறு மேம்பாட்டுப் பகுதிகளில், குறைந்தபட்ச தளப்பரப்பு குறியீடு, 3.25 என்றும், அதிகபட்சமாக, ஆறு மடங்கு வரை தளப்பரப்பு குறியீடு அனுமதிக்கப்படும்தொழில் பூங்காக்களில், அதிகபட்சமாக, 4.87 மடங்கு வரை தளப்பரப்பு குறியீடு அனுமதிக்கப்படும், தனி மனை கட்டடங்களுக்கு, ஆறு மடங்கு வரை தளப்பரப்பு குறியீடு அனுமதிக்கப்படும் தொழில் வளாகங்களில், கட்டுமான பரப்பளவு அடிப்படையில், சதவீத முறையில் வாகன நிறுத்துமிடம் ஒதுக்கவும், புதிய வழிமுறை விதிகளில் சேர்க்கப்பட்டுஉள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி