உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தரம் தாழ்ந்த சீமான்; குழப்பத்தில் திருமா; சொல்கிறார் தினகரன்

தரம் தாழ்ந்த சீமான்; குழப்பத்தில் திருமா; சொல்கிறார் தினகரன்

காரைக்குடி: பிரபலமாவதற்காக எதிர்மறையான கருத்துக்களை பேசி சீமான் தரம் தாழ்ந்து வருகிறார் என்று அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார்.காரைக்குடியில் உள்ள அ.ம.மு.க., கட்சி அலுவலகத்தில் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்பு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திருமாவளவன் மது ஒழிப்பு கொள்கையில் ஆரம்பத்திலிருந்து தீவிரமாக உள்ளார். ஆனால் சமீப காலமாக அவர் குழப்பத்தில் இருக்கிறார். அதனால்தான் அந்தப்பதிவை அட்மின் போட்டதாக தெரிவிக்கிறார். கொரோனா காலத்தில் மது இல்லாமலும், உடல் நல பாதிப்பு இல்லாமலும் பலர் இருந்தனர்.படிப்படியாக மது ஒழிப்பு என்பது சாத்தியம். வரும் சட்டசபை தேர்தலின் போது தே.ஜ., கூட்டணிக்கு புதிய கட்சி வரவதற்கு வாய்ப்பு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் இதுவரை போட்ட ஒப்பந்தங்கள் எல்லாம் காகிதத்தில் மட்டுமே உள்ளது. வேறு எந்த தகவலும் இல்லை. ஸ்டாலின் வெளிநாட்டிற்கு சென்றது எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு சென்ற கதைதான். இ.பி.எஸ்., ஆட்சி தான் தமிழ்நாட்டில் மிகப்பெரிய மோசமான ஆட்சி. ஆனால், இ.பி.எஸ்., 4 ஆண்டு ஆட்சியை விட தி.மு.க., ஆட்சி மோசமாக உள்ளது. விளம்பரத்தால் தி.மு.க., ஆட்சி இயங்கி வருகிறது. மக்கள் அதிருப்தியில் உள்ளனர். தி.மு.க., வலுவான கூட்டணியினாலும் பணத்தை பயன்படுத்தியுமே லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றது. தி.மு.க.,வின் பி டீமாக இ.பி.எஸ்., உள்ளார். அ.தி.மு.க.,வில் உள்ள நிர்வாகிகள் தொண்டர்கள் இ.பி.எஸ்.,க்கு முடிவு கட்ட வேண்டும். இல்லையென்றால் 2026 தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க.,விற்கு இ.பி.எஸ்., முடிவு கட்டி விடுவார். சீமான் எதிர்மறையான கருத்துக்களை பேசினால் தான் பிரபலமாக முடியும் என்பதற்காக மறைந்த தலைவர்கள், போலீசார், பிற துறைகள் சார்ந்தவர்கள் குறித்து தரம் தாழ்ந்து பேசுகிறார். இது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு தினகரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை