உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அவமதிப்பை ஏற்க முடியாது: நடிகர் விஜய்

அவமதிப்பை ஏற்க முடியாது: நடிகர் விஜய்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது,'' என த.வெ.க., தலைவர் விஜய் கூறியுள்ளார்.அரசியலமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பார்லிமென்டில் விவாதம் நடந்தது. இதில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அவர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, பார்லிமென்டில் அமளியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டதால், இரு அவைகளும் நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ypt95bdk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக த.வெ.க., தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர்.அம்பேத்கர்... அம்பேத்கர்... அம்பேத்கர்... அவர் பெயரை உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம். எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த மத்தியஉள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 49 )

NATARAJAN R
டிச 19, 2024 17:06

திரு விஜய் அவர்களே கட்சி தொடங்கும்போது உங்களை வித்யாசமான அரசியல்வாதி என்று நினைத்தேன். அது பொய் என்று நிரூபித்து வருகிறீர்கள். பாராளுமன்றத்தில் நடந்ததை அறியாமல் அம்பேத்காருக்கு அவமானம் என்று அறிக்கை விடுகிறீர்கள். வரலாறு தெரியுமா? அம்பேத்காரை தேர்தலில் தோற்கடிக்க வேலை செய்தது காங்கிரஸ். அம்பேத்காருக்கு பாரதரத்னா வழங்க எதிர்ப்பு தெரிவித்தது காங்கிரஸ். கண்டிப்பாக நீங்கள் மக்களால் புறக்கணிக்கப்படுவீர்கள். கட்சி தொடங்குமுன் ஒரு முறை கூட நீங்கள் அம்பேத்கர் பெயரை உச்சரித்ததில்லை.


rajkumar subbiya
டிச 19, 2024 16:54

காலத்தின் கொடுமை... அம்பேத்கர் சட்ட மாமேதை


Narayanan
டிச 19, 2024 15:51

இந்த கிறிஸ்துவனுக்கும் முதல்வர் ஆகவேண்டும் என்று கனவு வந்து இருக்கிறது . 2026 தேர்தல் உதயநிதி கிறிஸ்துவனா , விஜய் கிறிஸ்துவனா என்றுதான் போட்டி . ஆக தமிழக மக்கள் ஒரு ஹிந்துவை தேர்தெடுங்கள்.


S. Neelakanta Pillai
டிச 19, 2024 15:15

அப்படி என்ன சொன்னாங்க.....எதுவும் தெரியாது ஆனால் கண்டிக்க வந்துட்டாரு. இன்னும் நடிகனாகவே இருந்தா எப்படி.....


PADMANABHAN R
டிச 19, 2024 10:21

ஏன் கூத்தாடி நீயெல்லாம் கருத்து சொல்ல வந்துட்டே. அம்பேத்கர் பற்றி உனக்கு என்ன தெரியும்? அவரை தேர்தலில் ஜெயிக்க விடாமல் சதி செய்த கும்பலை பற்றி உனக்கு தெரியுமா?


orange தமிழன்
டிச 19, 2024 09:48

எல்லோரும் பாத்துக்கோங்க நான் கட்சி ஆரம்பித்துவிட்டேன், மாநாடு நடத்திவிட்டேன், அறிக்கையும் விட்டாயிற்று.. நானும் அரசியல்வியாதி தான்.....


kannan
டிச 19, 2024 09:27

ஜோசப், நீ நேர்மையானவனாக இருந்தால் உனது பெயரை ஏன் ஜோசப்பை நீக்கி விட்டு எழுதுகிறாய்? நீ நேர்மையானவன் என்றால் சினிமாவில் நடிக்க வாங்கும் பணத்திற்கு சரியாக வரி கட்டுவாயா?


S.Murali
டிச 19, 2024 10:54

YOU DONT KNOW FULL HISTORY PL. REVEAL YOUR EDUCATIONAL QUALIFICATION THE DRAFING OF CONSTITUTION BY SO MANY SCHOLARS AS A HEAD HIS LABEL AFFIXED? AS KANNAN ASKED ARE YOU A HONEST TAX PAYER?? WHAT ELSE YOU DID FOR THE SOCIETY? YOUR FILMS ARE ROUDY HEROICS?


Raj
டிச 19, 2024 08:01

அவமதிப்பா.


m.arunachalam
டிச 18, 2024 22:56

பணம் செலவு செய்பவர்களை கட்சிக்கு திருப்தி படுத்த விட்டால் அறிக்கை போல் உள்ளது .


K.Ramakrishnan
டிச 18, 2024 22:34

அய்யா திடீர் அரசியல்வாதி... அம்பேத்கரின் மீது திடீர் பாசக்காரரே.. எத்தனை படங்களில் அண்ணல் அம்பேத்கர் பெயரை உச்சரித்தீர்கள்? எம்.ஜி.ஆர். தன் பாடலில் அண்ணா பெயரை சேர்த்தார். உங்கள் பாடலில் அம்பேத்கர் பெயர் வந்திருக்கிறதா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை