உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சர்வதேச திரைப்பட விழா கோவாவில் 20ல் துவக்கம்

சர்வதேச திரைப்பட விழா கோவாவில் 20ல் துவக்கம்

சென்னை:''மத்திய அரசு சார்பில், இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் வரும் 20 முதல் 28ம் தேதி வரை நடக்கிறது; இதில், சர்வதேச சினிமா பிரபலங்கள் பங்கேற்கின்றனர்,'' என, மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன் கூறினார். அவர் அளித்த பேட்டி:நாட்டில் சினிமாத்துறை தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கும் வகிக்கிறது. மத்திய அரசு கோவாவில் ஆண்டுதோறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவை நடத்துகிறது.அதில், சர்வதேச மற்றும் நாட்டின் அனைத்து மொழிகளைச் சேர்ந்த திரை பிரபலங்கள் பங்கேற்கின்றனர். இது, திரைப்பட விழா மட்டும் அல்லாமல், தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தவும், சினிமாவை விற்பது தொடர்பாக, பல்வேறு நாட்டினருடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளவும் உதவுகிறது.சர்வதேச திரைப்பட விழா தொடர்பாக, தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கு திரைத் துறையினருடன் ஆலோசிக்கப்பட்டது. அவர்கள், தென் மாநிலங்களில், 'சென்சார்' மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும். ஓ.டி.டி., தளத்தில், 'சென்சார்' கட்டுப்பாடு விதிப்பு தொடர்பாக கோரிக்கை விடுத்தனர்.ஓ.டி.டி., தளத்தில், நாட்டின் கலாசாரம், பாதுகாப்புக்கு எதிராக செயல்படுவதை அனுமதிக்க முடியாது. இதுதொடர்பாக, புதிய ஒளிபரப்பு கொள்கை வெளியிடப்பட உள்ளது. இதற்காக வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு, கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன.பிரதமர் மோடி ஆலோசனையில், வரும் பிப்ரவரியில் டில்லியில் முதன்முறையாக, 'வேவ்ஸ்' அதாவது, 'வேர்ல்ட் ஆடியோ விஷ்வல் அண்டு என்டர்டெயின்மென்ட்' என்ற பெயரில், நாளிதழ், தொலைக்காட்சி, வானொலி, விளம்பரம், சமூக வலைதளம் போன்ற துறையினர் பங்கேற்கும் மாநாடு நடத்தப்படும்.நாட்டுப்பற்றை துாண்டும் திரைப்படங்கள் எடுப்பதை அரசு ஊக்குவிக்கும். அந்த வகையில், அமரன் திரைப்படத்திற்கு பாராட்டுகள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை