உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டம்மி ரூபாய் நோட்டு குவியல் தொழில் அதிபரிடம் விசாரணை

டம்மி ரூபாய் நோட்டு குவியல் தொழில் அதிபரிடம் விசாரணை

சென்னை:வீட்டில் குழந்தைகள் விளையாடும், 'டம்மி' ரூபாய் நோட்டுகளை, ஏராளமாக பதுக்கி வைத்து இருந்தது குறித்து, தொழில் அதிபரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ரஸீது; தொழில் அதிபர். இவர், சென்னை ராயப்பேட்டை பூரம் பிரகாசம் சாலையில் வசித்து வருகிறார். இவரது வீட்டில், 10 கோடி ரூபாய் கள்ள நோட்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதில் பயங்கரவாதி கள் சதி இருக்கலாம் என்பதால், வருமான வரித்துறை மற்றும் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், நேற்று முன்தினம் இரவு, 9:30 மணியில் இருந்து, நேற்று மாலை, 3:00 மணி வரை, சோதனை செய்தனர்.அப்போது, கணக்கில் வராத, 50 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அவரது 'இனோவா' காரில் குழந்தைகள் விளையாட பயன்படுத்தும், டம்மி ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் குறிப்பிடப்பட்டிருந்த மதிப்பை கணக்கிட்டபோது, 9.50 கோடி ரூபாய் வந்தது. 'டம்மி ரூபாய் நோட்டுகளை எதற்காக பதுக்கி வைத்துள்ளீர்கள்?' என்ற கேள்விக்கு, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து, அவரை ராயப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர். நல்ல ரூபாய் நோட்டுகளை மேல் பகுதியிலும், அதன் கீழே டம்மி ரூபாய் நோட்டுகளை வைத்து, யாரையும் ஏமாற்றி உள்ளனரா என்றும் விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ