உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இபிஎஸ்., குறித்த ரகசியங்களை பொது வெளியில் சொல்ல முடியாது: பன்னீர்செல்வம்

இபிஎஸ்., குறித்த ரகசியங்களை பொது வெளியில் சொல்ல முடியாது: பன்னீர்செல்வம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., குறித்த ரகசியங்களை பொது வெளியில் சொல்ல முடியாது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறினார்.சென்னை திருவான்மியூரில் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அவரை சந்தித்த போது அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. அவரை சந்தித்த போது வாழ்த்து கடிதம் மட்டுமே அளித்தேன். மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் டில்லிக்கு சென்று அவரை சந்திப்பேன்.இபிஎஸ்., தொடர்பான ரகசியங்களை பொது வெளியில் சொல்ல முடியாது. காலம் வரும் போது அதை வெளியிடுவேன். உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு நியாயம் நிச்சயம் கிடைக்கும். இபிஎஸ் ராஜினாமா செய்யும் வரை உரிமை காக்கும் போராட்டம் தொடரும். எம்ஜிஆர் வகுத்த விதிகளை கல்நெஞ்சம் படைத்தவர்கள் ரத்து செய்தனர். சசிகலாவை தரக்குறைவாக பேசி நம்பிக்கை துரோகம் செய்தவர் இபிஎஸ்.அதிமுகவை., மீட்டெடுப்பதற்கான போராட்டம் தொடரும். அமமுக., உடன் இணைந்து லோக்சபா தேர்தலை சந்திப்போம். சசிகலா விரும்பினால், அவரையும் சந்திப்பேன். பா.ஜ., உடன் இணைந்து செயல்படுவதற்கான நல்ல சூழல் உருவாகி உள்ளது. இபிஎஸ் ஆட்சியில் நடந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டு உள்ள உண்மை குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். லோக்சபா தேர்தலில் பாஜ., கூட்டணி வெற்றி பெறும். மோடி, மீண்டும் 3வது முறையாக ஆட்சிக்கு வருவார். இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

K.Ramakrishnan
ஜன 03, 2024 22:46

நீங்க அவரு ரகசியத்தை பொது வெ ளியில் சொல்ல முடியாது என்கிறீர்கள். அவருஆட்சியில் துணை முதல்வராக இருந்தவர் நீங்கள். அப்படி என்றால் அந்த ரகசியத்துக்கு உடந்தையாக இருந்த நீங்களும் குற்றவாளிகள் தான்.


Senthil Kumar
ஜன 03, 2024 21:34

நானும் இருக்கிறேன் அரசியலில் என்று காண்பித்து கொள்கிறார், ஆனால் கண்டு கொள்ள தான் யாரும் இல்லை. அடிமைக்கு அடிமையாக மட்டும் இருக்க தெரியும், தலைவன் என்பவன் தனித்து இயங்க கூடியவன், இன்னொருவருடன் சேர்ந்து இயங்கினால் நீங்கள் என்ன தலைவர் அய்யா.


R. Vidya Sagar
ஜன 03, 2024 20:42

இதுவும் நீட் ரஹஸ்யம் மாதிரி மிகவும் பாதுகாப்பானது போல


aaruthirumalai
ஜன 03, 2024 18:18

பச்ச ஒந்தி எப்ப நிறம் மாறும்னு யாரும் சொல்ல முடியாது.


தமிழ்
ஜன 03, 2024 17:30

அப்போ எதுக்கு பேட்டி கொடுக்க வந்திருக்க?


Premanathan S
ஜன 03, 2024 17:22

கீரி -பாம்பு வித்தை கதைதான் . ஒரு புண்ணாக்கு ரக சியமும் கிடையாது. .


Anand
ஜன 03, 2024 16:47

அப்படி என்ன வெளியில் சொல்ல முடியாத ரகசியம்...


Nallavan
ஜன 03, 2024 16:26

சசிகலாவை எதிர்த்து, ஜெயலலிதா அம்மையாரின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக, தர்மயுத்தம் நடத்தினாரே...


Nallavan
ஜன 03, 2024 16:22

பா மா க மற்றும் தே மு தி க உடன் ஓ பி எஸ் மற்றும் அமமுக சேர்ந்தால், நிச்சயம் அனைத்து தொகுதிகளிலும் வெல்வார்கள்.


அப்புசாமி
ஜன 03, 2024 16:15

பா.ஜ வுக்கு வலை வீசி பார்த்தால்.ஒப்ணும் தேறலை போலிருக்கு. இ.பி.எஸ் நினைப்பு.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை