உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தூய்மைப் பணியாளர்களுக்கான திட்டத்தில் முறைகேடு: சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு

தூய்மைப் பணியாளர்களுக்கான திட்டத்தில் முறைகேடு: சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு எதிராக யூடியூபர் சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ht9v2ppt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தூய்மைப் பணியாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அவர்களை தொழில் முனைவோர்களாக்கும் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் சவுக்கு சங்கர் வழக்கு தொடர்ந்தார்.அவர், இந்தத் திட்டத்தில் நடந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இது தொடர்பாக சென்னை ஐகோட்டில் அவர் தாக்கல் செய்த மனுவில், 'இந்த திட்டத்தை அமல்படுத்தும் பணிகள் சட்டவிரோதமாக தனியார் அமைப்புக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை முக்கிய பங்கு வகித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ.,க்கு உத்தரவிட வேண்டும்' எனக் கூறியிருந்தார்.இந்த வழக்கு இன்று (மே 14) நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. மேலும், இந்த வழக்கில் சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரிய தலைவரையும் சேர்க்க வேண்டும். நகராட்சி அலுவலகம், குடிநீர் வழங்கல் செயலர், சிறு, குறு நடுத்தர தொழில் செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Bhaskaran
மே 15, 2025 20:40

காமராஜர் போன்ற நேர்மையான தலைவர்கள் இருந்த கட்சி கார் கேவின் அல்லக்கை பெருந்தகை ஊழல் செய்ததில் வியப்பென்ன .வழக்கு கண்துடைப்பு தான்


Gajageswari
மே 15, 2025 17:20

வெற்றி பெற வாழ்த்துக்கள்


pmsamy
மே 15, 2025 08:06

சவுக்கு சங்கர் ஒரு கட்சி ஆரம்பிக்க வேண்டும் இது மக்கள் விருப்பம்


Kasimani Baskaran
மே 14, 2025 18:59

திராவிட மத மூடநம்பிக்கை மற்றும் மதவெறியில் ஊறிப்போன சவுக்கர் ஒரு முரட்டு உடன்பிறப்பு. வீட்டுக்கு வந்து அவரது வயதான அம்மாவை மிரட்டினாலும் கூட திராவிடம் தெளித்தது முழுவதுமாக செல்வப்பெருந்தொ[த]கை மட்டுமே ஏற்பாடு செய்த ஆட்கள்தான் என்று தீர்க்கமாக நம்புகிறார்.


Anantharaman Srinivasan
மே 14, 2025 18:28

சவுக்கு சங்கர் போன்று பொதுநல வழக்கு தொடுக்கும் நேர்மையான சமூக ஆர்வலர்களுக்கு மத்தியரசு Y பிரிவு பாதுகாப்பு கொடுக்கணும்.


கோமாளி
மே 14, 2025 18:23

ஆதாரம் இல்லாமல் சவுக்கு சுழலாது. யாரோ மாட்டப் போறாங்கோ


Barakat Ali
மே 14, 2025 17:10

சவுக்கு சங்கரின் பாதுகாப்பை உறுதிப் படுத்தணும் ..


மணி
மே 14, 2025 16:48

இந்த நாட்டில் ஆளுக்கு ஒரு சட்டம் நீதி இதுல மட்டும் என்ன நடந்துட போகுது


Ramesh Sargam
மே 14, 2025 16:48

திமுக அரசு எல்லாத்துறைகளிலும் ஊழல் புரிந்திருக்கிறது.


முக்கிய வீடியோ