உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பது சடங்கா? விஜய்க்கு சீமான் கண்டிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பது சடங்கா? விஜய்க்கு சீமான் கண்டிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: 'வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திப்பதை சடங்கு என்று விஜய் சொல்லக்கூடாது. மக்களை நேரில் சென்று சந்திப்பது தலைவர்களின் கடமை' என சீமான் தெரிவித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ebieuv18&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திருச்சியில் சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்காதது தவறு அல்ல. விஜய் மக்களை பார்க்க போனால், கூட்டம் கூடி விடும். பாதுகாப்பு அளிப்பது போலீசாருக்கும் கடினம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திப்பதை சடங்கு என்று எப்படி த.வெ.க., தலைவர் விஜய் கூறலாம்? அது தவறான வார்த்தை. அப்படி சொல்லக் கூடாது. இரண்டு மாதம் மக்களோடு மக்களாக, நின்று வேலை செய்துள்ளோம்.மக்களோடு மக்களாக நிற்பவர்களை அப்படி பேசுவதை ஏற்க முடியாது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திப்பதை சடங்கு என்று விஜய் சொல்லக்கூடாது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திப்பது தலைவர்களின் கடமை. மக்களை நேரில் சென்று சந்திப்பது சடங்கு என கூறும் விஜய், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்தது ஏன்?

துரோகம்

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்தது ஏன்? ஒரே நாடு, ஒரே தேர்தலை ஆதரிப்பது மிகப்பெரிய துரோகம். தமிழக அரசு நிறைவேற்றிய சட்டங்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்க மறுப்பது தவறு. அம்பேத்கர் பெயரை கூறியவர் தான் வெற்றி பெற்றுள்ளார். இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Rpalni
டிச 19, 2024 20:51

நடிகர் விஜய் ஒரு கேரவன் தலைவர். சொகுசு கேரவனில் உட்கார்ந்து கொண்டு அறிக்கை கொடுக்கும் கோழை.


வைகுண்டேஸ்வரன் V
டிச 19, 2024 19:18

சீமான் பற்றிய செய்தி போட்டு ஏன் நேரத்தை வீணடிக்கிறீர்கள்?


ponssasi
டிச 19, 2024 17:05

அம்பேத்கர் பெயரை கூறியவர் தான் வெற்றி பெற்றுள்ளார். அப்ப வெற்றிபெறுவதற்கு மட்டுமே நீங்க அம்பேத்கார் பற்றி பேசுறீங்கதானே. பாவம் mind வாய்ஸ்னு நெனச்சு சத்தமா பேசிடீங்க , பரவாயில்லை இன்னிக்கு இந்தியாவுல இருக்குற அம்பேத்காரை கொண்டாடும் தலைவர்கள் அனைவரும் அம்பேத்கார் சார்ந்த வாக்குகளுக்காக மட்டுமே என்பது நிதர்சனம். பாவம் அந்த மக்கள் அம்பேத்காரை எண்ணி தவறானவர்களுக்கு வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள்


ராமகிருஷ்ணன்
டிச 19, 2024 16:26

அங்கே பாராளுமன்றத்தில் அடி தடியடி நடக்குது. இங்கேதன் கட்சி கலகலத்துப் போய் விட்டது என்று புலம்பி வருகிறார்.


Anand
டிச 19, 2024 16:24

இவரும் அதுபோல ஆகிக்கொண்டிருக்கிறார்..


AKM KV SENTHIL MUSCAT
டிச 19, 2024 16:20

அய்யா


Ramanujadasan
டிச 19, 2024 16:13

இதுவும் பாவாடை , அதுவும் பாவாடை , தசம பங்கு பணத்திற்கு போட்டி போடுதுங்க


R.MURALIKRISHNAN
டிச 19, 2024 16:10

அப்ப நீர் வெற்றி பெறுவீர் என நீரே கூட சொல்ல மாட்டீர். இல்ல அது தானே உண்மையும் கூட


Perumal Pillai
டிச 19, 2024 15:00

தீவிரவாதி அவனை என்னிக்கு அப்பன் என்றானோ அன்னைக்கே இவன் கட்சி செத்து விட்டது . பல அப்பன்கள் உடையவன் என்னும் மாண்பு மிக்கவன் .


RAJ
டிச 19, 2024 14:30

ஆமை மூக்கா, ஒரே நாடு, ஒரே தேர்தலால என்ன பிரச்சனைனு சொல்லு பார்ப்போம்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை